பாகிஸ்தானில் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோரை பொது இடத்தில் தூக்கிலிட தீர்மானம்

இஸ்லாமாபாத்: குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோரை பொது இடத்தில் தூக்கிலிடும் தீர்மானம், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானில், குழந்தைகள் பாலியல் பலாத்காரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 1,300 குழந்தைகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த, 2018ல், பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் உள்ள நவ்ஷேரா என்ற இடத்தில், 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதனால், குழந்தைகளை பலாத்காரம் செய்வோரை தண்டிக்க கடுமையான சட்டம் தேவை என அங்குள்ள பெண்கள் அமைப்புகள் வலியுறுத்தின. இதையடுத்து, குழந்தைகளை பலாத்காரம் செய்வோரை பொது மக்கள் மத்தியில் தூக்கில் போட வகை செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

பாகிஸ்தான் மக்கள் கட்சியைத் தவிர்த்து ஏனைய உறுப்பினர்களின் ஆதரவோடு இந்தத் தீர்மானம் நிறைவேறியது. இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜா பர்வேஸ் அஷ்ரப், தணடனைகளை அதிகப்படுத்துவதால் குற்றங்கள் குறையாது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு எதிராக பொதுவெளியில் தூக்கிலிடும் முறையை நாம் கொண்டு வர இயலாது என்று தெரிவித்தார். அதேநேரம் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பவாத் சவுத்ரியும் இந்தத் தீர்மானத்தை கடுமையாக எதிர்த்துளார்.  இந்த மாறுபாடான கருத்துகளின் இடையே, இந்தத் தீர்மானம் அரசால் கொண்டு வரப்பட்டதில்லை என்றும், தனி நபர் முன்மொழிந்த தீர்மானம் என்றும், மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷிரீன் மசாரி தெளிவுபடுத்தியுள்ளார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *