ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் கோட்டாவுடன்?

ஜக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து பயணிக்க முடியும் என்று கூறுகின்றனர். இந்த விடயம் கவலையளிக்கின்றது. அவ்வாறு இணைந்து பயணிக்க வேண்டுமாயின் ஐ.தே.கவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு கூறிக்கொள்பவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து பயணிக்கலாமே.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து ஆட்சியமைக்கத் தயார் என்று கூறிக்கொள்கின்றனர். இது கவலையளிக்கின்றது.

ஏனெனில், ஜனாதிபதிக்கு எனத் தனிப்பட்ட கொள்கை உண்டு. அதன்படி அவர்கள் ஆட்சி அமைத்துள்ளனர்.

இந்தநிலையில், எமக்கென தனித் கொள்கையுண்டு. மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணமுண்டு. ஐ.தே.க. உறுப்பினர்களுக்கெனத் தனிப்பட்ட ரீதியில் கௌரவமும் உண்டு.

எனவே, ஜனாதிபதியுடன் இணைவது மொட்டுக் கட்சியினருடன் கைகோர்க்கும் முயற்சியாகவே கூற முடியும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறாக அவர்களுடன் இணைந்து பயணிக்கத் தயாரெனின் அவர்கள் செய்த விடயங்கள் அனைத்தும் சரியென்றாகிவிடுமே. அந்தவகையில் கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து பயணிப்பதென்பது சாத்தியமற்ற விடயமாகும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *