கேன்ஸர் என்றால் என்ன அதை எப்படி கண்டுபிடிப்பது

#கேன்சர்_என்றால் #என்ன??

நமது உடலில் டிரில்லியன் கணக்கில் செல்கள் உள்ளன. அதில் உள்ள செல்களில் #DNA எனும் மரபணு உள்ளது. ஏதோ ஒரு விஷயத்தால் இந்த #_DNA_டேமேஜ் ஆனால் #கேன்சர் #வருகிறது.

ஒரு செல் இரண்டு செல்களாக ஆக வேண்டும் என்றால், அதற்கென சில கட்டுப்பாடுகள் உள்ளது.

#குழந்தை வயிற்றில் வளரும் பொழுது ஒரு செல் இரண்டு செல்களாகும், இரண்டு நான்காகி பல்கிப் பெருகி, கரு குழந்தையாக வளர்ச்சியடையும். ஆனால் பிறந்தவுடன், இந்த செல்கள் இரண்டாக பிரியும் சாகசம் நின்று விடும். இப்படித்தான் உடலில் பல செல்கள் இயங்குகின்றன.

சில செல்கள் மட்டும் இரண்டாக உடையும் தன்மையை வாழ்நாள் முழுதும் பெற்றிருக்கின்றன. எ.கா எலும்பு மஜ்ஜையில் இருக்கும் ரத்த செல்கள் உற்பத்தி.

இப்பொழுது ஒருவர் வாயில் புகையிலை மெல்லுகிறார் என வைத்துக் கொள்வோம்.

புகையிலையில் உள்ள கெமிக்கல்கள் அவரது வாய் செல்களின் DNAவை டேமேஜ் செய்து விடும். இப்படி ஆவதால் வாயில் உள்ள ஒரு செல்லுக்கு இரண்டாக உடையும் ஆற்றல் வந்து, நான்காகி, எட்டாகி, அப்படியே கேன்சர் கட்டி ஆகிறது.

இப்படி உடலில் உள்ள எல்லா செல்களும் கேன்சரால் பாதிப்படையலாம்.

ரத்த வெள்ளை செல் கேன்சர்,

தோல் கேன்சர்,

வயிறு,

மார்பகம்,

கர்ப்பப்பை,

நுரையீரல்,

எலும்பு

என நாம் அறிந்த எந்த உறுப்பு செல்லிலும் கேன்சர் வரலாம்.

★கேன்சருக்கு நாம் அறிந்த காரணங்கள் சில உண்டு.

புகையிலை,

சிகரெட்,

வைரஸ்கள்,

சில கெமிக்கல்கள்

நமக்கு தெரிந்தவை. தெரியாத காரணங்கள் பல.

அதனால் தான் கேன்சர் வந்த சிலருக்கு,
“#நாம்_எந்த_தவறும் #செய்யவில்லையே, #எனக்கு_எப்படி #கேன்சர்_வந்தது?”

என டாக்டர்களிடம் கேட்க, டாக்டர்கள், “கேன்சர் யாருக்கு வேணா வரலாம், குழந்தை பெரியவர், ஆண் பெண் என்ற எந்த பாகுபாடும் கிடையாது என்பர்.

★எப்படி கண்டுப்பிடிப்பது.

குடும்பத்தில் புற்று நோய் இருந்தால், நமக்கு கேன்சர் வருமா என கண்டுபிடிக்க சில மரபணு சோதனை உள்ளது.

மார்பக(prostrate)
கேன்சர் வருமா என கண்டறிய PSA போன்ற சில டெஸ்டுகள் உள்ளன.

மொத்தாமாக சொன்னால், எந்த கேன்சராக இருந்தாலும் வந்த பின்னர் தான் கண்டறிய முடியும். ஏதோ கட்டி வருகிறது, வலி வருகிறது என்ற காரணத்தால் டாக்டரை பார்க்கும் போது தான் கேன்சர் கண்டறியப்படுகிறது.

“கேன்சர் வந்தா அவ்ளோ தான்” என்கிறார்களே?

அவர்களை முதலில் உதைக்க வேண்டும். நான் சொன்னது போல் ஆயிரக்கணக்கான கேன்சர்கள் உள்ளன.

உதாரணம் #தைராய்டு கேன்சரை எடுத்துக் கொள்வோம்.

#ஒன்பது வகையான தைராய்டு கேன்சர் உள்ளது.

ஒவ்வொன்றிற்கும்
9 ஸ்டேஜ் உள்ளது.

ஸ்டேஜ் என்றால் என்ன?

அதுவும் கேன்சருக்கு கேன்சர் மாறுபடும்.

ஸ்டேஜ் 1- சிறிய சைஸ் கேன்சர்,

ஸ்டேஜ் 2- பெரிய சைஸ்,

ஸ்டேஜ் 3- பெரிய சைஸ் மற்றும் நெறிக்கு பரவியுள்ளது,

ஸ்டேஜ் 4- வேறு செல்களுக்கு பரவியுள்ளது.

என வித விதமான ஸ்டேஜ்கள் உள்ளன.
ஒவ்வொரு கேன்சரும் ஒவ்வொரு மாதிரியானவை. சிலது ஒன்றுமே செய்யாது, ஜஸ்ட் வளர்ந்து கொண்டே இருக்கும். சிலது இருப்பதே தெரியாது. கண்டுபிடிக்கும் போதே டிரிட்மென்ட் தந்து சரி செய்ய முடியாத நிலையில் இருக்கும்.

நான் சொல்ல வருவது என்னவென்றால், கேன்சர் என்றவுடனே படத்தில் ரத்தம் கக்கி சாவதை போல இங்கு ஒரு பிம்பம் உள்ளது.

ஆயிரக்கணக்கான கேன்சர் உள்ளது. ஒவ்வொன்றிற்கும் பல ஸ்டேஜ்கள் உள்ளன. எந்த கேன்சருக்கு எந்த ஸ்டேஜுக்கு என்ன வைத்தியம் என்பதை முடிவு செய்ய வேண்டியது. Oncologist எனப்படும் கேன்சர் ஸ்பெஷலிஸ்ட். அவர் மட்டுமே முடிவு செய்யலாம்.

நீங்களும் உங்கள் உறவினர் பயாப்சி ரிப்போர்டை நெட்டில் வைத்து அலசினால் அதற்கு இன்றைய தேதியில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு பல புரோட்டோகால்கள் நெட்டில் கிடைக்கும். உங்கள் oncologist அதைத் தான் செய்யப் போகிறார்.

#கேன்சருக்கு_எந்த #வைத்தியம் #சிறந்தது?

இது ஒரு கிறுக்குத்தனமான கேள்வி.

ஆயிரக்கணக்கான கேன்சர்களின், லட்சக்கணக்கான ஸ்டேஜ்களுக்கு ஒரே வைத்தியம் என்பது நடக்காது.

ஒவ்வொரு கேன்சருக்கும் பல ஆராய்ச்சிகள் நடந்து முடிவில் இன்றைக்கு எந்த கேன்சருக்கு எந்த ஸ்டேஜுக்கு என்ன வைத்தியம் என புரோட்டோகால் முடிவு செய்கிறார்கள்.

அதை oncologist உதவியுடன் செய்வது நலம்.

உங்கள் oncologist சர்ஜரியோ, ரேடியோதெரபியோ, கீமொதெரபியோ, இம்யூனோதெரபியோ அல்லது இவைகள் கலந்தோ பரிந்துரைப்பார். அதை அவர் சொல்வது போல அப்படியே செய்வது நலம்.
நன்றி
சித்தா மற்றும் ஆயுர்வேதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *