சீனாவில் கொரோனா தொடர்ந்து பறவை காய்ச்சல் மனிதர்களையும் தாக்கும் அபாயம்?

சீனாவில் கோழிகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் : மனிதர்களையும் தாக்கும் அறிகுறி தென்படுவதாக அறிய முடிகிறது
கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான வுஹானிலிருந்து 350 மைல் தொலைவில் அமைந்துள்ள தெற்கு மாகாணமான ஹுனானின், ஷாயாங் நகரில் உள்ள பண்ணைகளில் H5N1 பறவைக் காய்ச்சல் தாக்கம் அதிகரித்திருப்பதாக சீன வேளாண்மை மற்றும் கிராம விவகார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
ஒரு பண்ணையில் 7,850 கோழிகளில் இந்த பறவைக் காய்ச்சல் இனங்கானப்பட்டுள்ளது. அவற்றில் 4,500 கோழிகள் பறவைக் காய்ச்சல் காரணமாக இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் பரவுவதைத் தடுப்பதற்காக சீன அதிகாரிகள் ஏற்கனவே 17,828 பறவைகளை அகற்றி பண்ணைகளை கிருமி நீக்கம் செய்து சீல் வைத்துள்ளனர்.
இந்த நோய் மனிதர்களை எளிதில் பாதிக்காது என்னினும் இத்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பலர் இறந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பறவைகள் அல்லது இறந்த பறவைகளிடமிருந்து நெருங்கிய தொடர்பு ஏற்படும் போது இக்காய்ச்சல் மனிதர்களுக்கு தொற்று நோயாக மாறும் அபாயம் உள்ளது.
மக்கள் இந்நோயால் பாதிக்கப்படும்போது, இறப்பு விகிதம் சுமார் 60 சதவீதமாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *