இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயர் ராஜீவ் பெரோஸ்கான்?

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயர் ராஜீவ் பெரோஸ் கான் என்றும், இந்திரா காந்தி முஸ்லீமாக மதம் மாறியவர் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. பர்வேஸ் வர்மா மக்களவையில் பேசி பெரும் பரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

இன்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசும் போதே பாராதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பர்வேஸ் வர்மா இவ்விடயத்தை பேசி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்

இந்திரா காந்தி பெரோஸ் கான் என்ற முஸ்லீமை மணமுடித்தார். அவரும் முஸ்லீமாக மாறினார். பின்னர் ஜவகர்லால் நேரு குடும்பத்து பாரம்பரியத்தை காட்டிக் கொள்வதற்காக காந்தி என்று தனது பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டார். எனவே ராஜீவ் பெரோஸ் கான் என்ற பெயர்தான் ராஜீவ் காந்தி என்பதற்கு சரியான பெயர்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் இது ராஜீவ் பெரோஸ் கான் அரசு கிடையாது. நரேந்திர மோடி அரசு என பாரதிய ஜனதா கட்சி எம்.பி. பர்வேஸ் வர்மா மேலும் பேசியிருந்தார்.

முன்னதாக இவரது பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *