35 இலட்சம் பெறுமதியான வீடு தோட்டம் பெண்ணுக்கு கொடுத்து திருமணம் செய்த வாலிபர்

பெண்ணுக்கு 35 லட்சம் பெறுமதியான வீடு வளவை மஹராகக் கொடுத்து மணமுடித்த காத்தான்குடி இளைஞன்…!
காத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவிலும், உறுதி எழுதியும் பதிவு செய்து திருமணம் முடித்துள்ளார் காத்தான்குடி இளைஞர் ஒருவர்.
குறித்த திருமணத்தில் கலந்து கொண்ட ஜஃபர் அலி
Jaufar Ali என்பவர் குறித்த விடையத்தினை பின்வருமாறு விபரிக்கின்றார்.
தற்போது சமூகத்தில் சாதாரண நடுத்தர இளைஞர்கள் மஹர் தொகையை நகைகளை,பணத்தொகை என்பவற்றை வழங்கி திருமணம் முடிக்கின்றனர்.
ஆயினும் தான் சம்பாதித்து கொள்வனவு செய்த வீட்டையே மஹராக உறுதியும் எழுதிக்கொடுத்து திருமணம் முடித்த விடயம் நான் அறிந்த வரை இதுவே முதலாவதாகும்.
இத்திருமணத்தைப் பதிவுசெய்த விவாகப்பதிவாளர் U.L.M.Jabeer.jp அவர்களும் தனது 25 வருட பதிவாளர் அனுபவத்தில் 4600க்கு மேற்பட்ட பதிவுகளில் மஹராக வீட்டைப் மணமகன் மணமுவந்து கொடுத்து திருமணம் செய்தமை இதுவே முதற்தடவையாகும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *