வைத்திய பரிசோதனைக்காக சென்ற மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்ட வைத்தியர்

முல்லைத்தீவு- மாவட்டத்தின் நகர் பகுதியில் உள்ள அரச வைத்தியசாலையில் உடற்தகுதி பரிசோதனைக்காக சென்ற பாடசாலை மாணவிகள் மீது உயர் பதவியில் உள்ள மருத்துவர் தகாத முறையில் நடந்து கொண்ட விடயம் அம்பலமாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக தமிழரசு கட்சியின் மத் திய செயற்குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், கடந்த மாதம் 10ம் திகதி மாவட்டத்தில் உள்ள பாடசலை ஒன்றிலி ருந்து மாணவர்கள் உடற்தகுதி சோதனைக்கு
சென்றுள்ளனர். இதன்போது மாவட்டத்தின் பொறு ப்புவாய்ந்த வைத்தியசாலை ஒன்றில் பொறுப்புவா ய்ந்த பதவில் உள்ள மருத்துவர் ஒருவர் குறித்த மா ணவிகளிடம் தனது இழிவான நடத்தையினைக் காண்பித்துள்ளார்.
மேலும் உடற்தகுதி பரிசோதனைக்காக சென்றிருந் த மாணவர்கள் காலையில் இருந்து மாலை வரை வைத்தியசாலையில் மறிக்கப்பட்டிருக்கின்றனர். இது குறித்து சில பெற்றோர் வைத்தியசாலைக்குச் சென்று கேட்டபோதும் அவர்கள் ஏமாற்றப்பட்டனர்.
மேலும் உடற்தகுதி பரிசோதனைக்கு மாணவிகள் அனுப்பப்பட்டபோது பெண் ஆசிரியை அனுப்பப்ப டவில்லை. காலையில் பரிசோதனைக்கு சென்றிரு ந்த மாணவிகள் மாலைவரை திரும்பாமை குறித்தும் பாடசாலை கவனிக்கவில்லை.
ஆகவே பாடசாலை நிர்வாகமும் இந்த விடயத்தில் மிக மோசமான தவறுகளை இழைத்துள்ளது. இவ் வாறான நிலையில் பாடசாலை இந்த விடயத்தை அடித்து மூடுவதற்கு முயற்சிக்கிறது. பாதிக்கப்பட்ட பிள்ளைகளை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ
அதுபோலவே உயர்பதவிகளில் உள்ள காட்டுமிரா ண்டிகள் தண்டிக்கப்படுவதும் முக்கியமானது. ஆக வே மாணவிகளை பாதுகாத்துக் கொண்டு குறித்த நபருக்கும், பாடசாலை நிர்வாகத்திற்கும் எடுக்கவே ண்டிய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்போம்
அதற்கான ஒழுங்குகள் செய்யப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *