இலங்கை சுற்றுலா பாரிய வீழ்ச்சி

நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 1300 என்ற அளவில் வந்துக்கொண்டிருந்த சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது 100 வரையில் குறைந்துள்ளது.
குடிவரவு கட்டுப்பாட்டாளர் பசன் ரட்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நாள் ஒன்றுக்கு 800 – 1300 வரை சீன பயணிகள் நாட்டுக்குள் வந்தனர்.
இவர்களில் வர்த்தகர்கள், தொழிலாளர்கள், மாணவர்களும் அடங்கியிருந்தனர். எனினும் கடந்த ஜனவரி 28ம் திகதிக்கு பின்னர் இந்த தொகை நாள் ஒன்றுக்கு 100 ஆக குறைந்துவிட்டது.
கொரோனா வைரஸ் தொடர்பில் சீனர்களுக்கு நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் சீனாவில் அவர்களுக்கு வழங்கப்படடுள்ள அறிவுரைகளுமே இந்த எண்ணிக்கை வீழ்ச்சிக்கான காரணம் என்று பசன் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் தகவல்படி கடந்த வருடத்தில் 167,863 சீனர்கள் இலங்கை வந்தனர். 2018இல் 265,965 பேர் இலங்கை வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *