இஸ்ரேல் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பாலஸ்தீனம்

இஸ்ரேல், அமெரிக்காவுடனான அனைத்து உறவையும் துண்டிப்போம் என பலஸ்தீன ஜனாதிபதி எச்சரிக்கை.
1967ம் ஆண்டு வரை ஜோர்தானின் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரத்தை கைப்பற்றிய இஸ்ரேல்  1980லிருந்து இந்நகரத்தை இஸ்ரேலுடன் இணைத்து கொண்டது. ஜெருஸலேம் நகரத்தில் யூத, கிறிஸ்தவ, முஸ்லிம் மதஸ்தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தவரும் இந்நகரத்தை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று வருகின்றனர்.
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள் சொந்தம் கொண்டாடிவரும் ஜெருஸலேம் நகரின் கிழக்கே அமைந்துள்ள ‘வெஸ்ட் வேங்க்’  ( West Bank) பகுதியில் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் பலஸ்தீனியர்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் இஸ்ரேல் அரசாங்கம் அத்துமீறிமைத்த செட்டில்மென்ட்’ ( Israeli settlement ) எனப்படும் திட்டமிட்ட குடியேற்றம் மூலம் சுமார் 2 லட்சம் யூதர்கள் வாழ்கின்றனர்.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருஸலத்தை இஸ்ரேலின் பிடியிலிருந்து மீட்பதற்காக நீண்டகாலமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இஸ்ரேலின்  தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்காவின் பிரதான தூதரகத்தை ஜெருஸலேத்துக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலின் புதிய தலைநகராக ஜெருஸலத்தை அங்கீகரிப்பதாக கடந்த வருடம் அறிவித்தார்.
இதனால், மத்திய கிழக்கில் பதற்றம் முற்றியது. குறிப்பாக, இஸ்ரேல் – பலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியது.
இந்த பதற்றத்தை தணிப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் ஒரு சமரச திட்டத்தை January மாதம் 28ம் திகதி   அறிவித்தார்.
இந்த திட்டத்தின்படி, வெஸ்ட் பேங்க் பகுதியில் வசிக்கும் பலஸ்தீனர்களின் எல்லைப்பகுதிக்கான தன்னாட்சி அதிகாரம் குறைக்கப்படும், அல்லது பறிக்கப்படும். மேலும், இஸ்ரேல் அரசாங்கத்தால் ஜெருஸலத்தின் கிழக்கில் அமைக்கப்பட்ட குடியிருப்புகள் அனைத்தும் இஸ்ரேல்  எல்லையுடன் இணைக்கப்படும். ஜோர்தான் பள்ளத்தாக்கு பகுதியும் இந்த இணைப்புக்குள் அடங்கும்.
இதற்கு பதிலாக, பலஸ்தீன பூர்வீக குடிமக்களான ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஸா முனைக்கு தனிநாடு என்ற அந்தஸ்து அளிக்கப்படும் என்பது அமெரிக்கா ஜனாதிபதியின் சமரச திட்டத்தின் ஒருபகுதியாகும்.
அமெரிக்காவின் இந்த சமரச திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பலஸ்தீன அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக அரேபிய நாட்டைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களின் உயர்மட்ட அவசர கூட்டத்துக்கு பலஸ்தீன அரசாங்கம் ஏற்பாடு செய்தது.
எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் இன்று நடைபெற்ற இக் கூட்டத்தில் பேசிய பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான அனைத்து உறவையும் துண்டிக்கப் போவதாக எச்சரித்துள்ளார்.
‘இந்த சமரச திட்டம் தொடர்பாக என்னுடன் தொலைபேசியில் பேச முயன்ற அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பை நான் நிராகரித்து விட்டேன். இவ்விவகாரம் தொடர்பாக எங்களுடன் (பலஸ்தீனம்) ஆலோசனை நடத்தினேன் என்று கூறும் வாய்ப்பாக இதை அமெரிக்கா ஜனாதிபதி பயன்படுத்திக் கொள்வார் என்பதால் அவரது அழைப்புக்கு நான் பதிலளிக்கவில்லை.
ஜெருஸலேம் நகரை நான் விற்று விட்டேன் என்ற அவப்பெயர் எனது வரலாற்றில் பதிவாகி விடக்கூடாது என்பதால் அமெரிக்காவின் இந்த சமரச தீர்வை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவந்து கிழக்கு ஜெருசலத்தை ஒரு தனிநாடாக அறிவிக்கும் இஸ்ரேல் அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிப்பதில் பலஸ்தீனியர்கள் என்றும்போல் இனிமேலும் உறுதியாக இருப்பார்கள்’ என இன்றைய கூட்டத்தில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *