சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் நடுக் கடலில் 7000 பயணிகள் ஆபத்தில்

கொரோனா வைரஸ் உலகின் ஐந்தாவது பெரிய சொகுசு பயணக் கப்பலில் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் 7000 பேர் ஆபத்தில் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆடம்பர இத்தாலிய பயணக் கப்பலில் இருந்த சீன தம்பதியினர் வைரஸ் பாதிப்புக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது
கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சீன தம்பதியினர் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி ஹொங்கொங்கிற்கு வந்திருந்தனர்.
கோஸ்டா ஸ்மரால்டா என்ற சொகுசு பயணக் கப்பல் ரோம் நகரின் சிவிடவேச்சியாவின் கரையோரத்தில் நங்கூரமிட்டதாக கூறப்படுகிறது.
ரோமில் உள்ள ஸ்பல்லன்சானி மருத்துவமனையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு சீன தம்பதியினரின் இரத்த பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் தற்போது கப்பலின் மருத்துவ பிரிவில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சீன தம்பதியினரின் நோய் அறிகுறிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகளை ஒத்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கப்பலில் உள்ள அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களை வெளியேறுமாறு ரோமானிய அதிகாரிகள் உத்தரவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *