உலகத்திற்கு ஆரம்ப மாதமே அழிவை தந்த 2020

2020 ஜனவரி உலக மக்களுக்கு அளித்துச் சென்ற முக்கிய ஏட்டுச் சுவடிகள்!

2020 ஜனவரி மாதத்தை சீர் தூக்கிப் பார்த்தால் ஆரம்பத்தில் இயற்கை அன்னையின் சீற்றத்திற்கும்,இடை நடுவே மனிதனின் தாசி அரசியல் வேட்கையின் மோகத்திற்கும்,இறுதியில் இறைவனின் கோபத்திற்கும் ஆட்பட்ட ஓர் காலப் பகுதியாகவே காணப்படுகிறது. இது தொடர்பில் விரிவாக ஆராய்வோம்.

01. #ஆஸ்திரேலிய #காட்டுத் #தீ!

இந்த வருட ஜனவரி ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக பேரழிவான சேதங்களை ஆஸ்திரேலியாக் கண்டம் சந்தித்திருந்தது.குறிப்பாக,நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கருதப்படும் இக் காட்டுத் தீ ஏராளமான இயற்கைப் பேரழிவுகளை ஏற்படுத்தியிருந்தது.நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 100’க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்ததில் 2 இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகி நாசமாகியது. இக் காட்டுத் தீ வேகமாகப் பரவியதால் ஆஸ்திரேலியக் கண்டத்தில் வாழும் உயிரினங்கள் அழிந்துள்ளதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருந்தனர். சிறிய விலங்கான #டன்னார்ட் என்ற உயிரினம்,#கங்காரு போன்றவை ஆஸ்திரேலியாத் தீவைத் தவிர உலகில் வேறு எங்கும் காணப்படுவதில்லை. இவ் உயிர்ப் பல்வகைமை முற்றிலும் அழியக் கூடிய நிலையை இந்த வருட ஆரம்பத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ ஏற்படுத்தியது. அரிய வகைச் செடிகள் மற்றும் பூக்களுக்கு பெயர் பெற்ற ஆஸ்திரிரேலிய காடுகளில் 5.8 மீட்டர் ஹெக்டெயர் அளவில் தீப் பிடித்திருந்தது. இயற்கை உயிர்ப் பல்வகைமையின் அழிவிற்கு இக் காட்டுத் தீ உலகைக் கொண்டு சென்றிருந்தது.

02. #வரலாறு #காணாத #பிரேசில் #வெள்ளம்
இந்த வருட ஜனவரி அளித்த இன்னுமொரு ஏடாக பிரேசில் நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தைக் குறிப்பிட முடியும். பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் பல உயிர்களைக் காவு கொண்டதோடு இயற்கைப் பேரழிவுகளையும் ஏற்படுத்திச் சென்றது. பிரேசில் நாட்டில் ரீயோ டி ஜெனிரோ, மினாஸ் கெராய்ஸ் (Minas Gerais), மற்றும் எஸ்பிரிடோ சான்டோ(Espirito Santo) ஆகிய மாகாணங்களில் பயங்கர புயல் காற்றுடன் கனமழை விடாமல் கொட்டி தீர்த்தது. இதையடுத்து ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் அங்குள்ள பல இடங்கள் தண்ணீரில் மிதந்தன.இதனால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.இதுவரை இந்த இயற்கை சீற்றத்துக்கு 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25,000 பேர் பாதுகாப்பாக வேறொரு இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர்.மினாஸ் கெராயிஸ் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் புயல் மற்றும் மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பிரரேசிலில் பெலோ ஹொரிசொன்டேவில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி 171.8 மிமீ மழை பதிவாகியது. பிரேசிலின் கடந்த 110 ஆண்டுகால வரலாற்றில் ஒரு நாளில் பெய்த அதிகப்பட்ச மழை அளவு இதுவாகும்.

03. #3ம் #உலக #யுத்தத்திற்கு #அறைகூவல் #விடுத்த #அமெரிக்க – #ஈரான் #முரண்பாடு.

ஜனவரி நடுப் பகுதியில் ஆரம்பித்த அமெரிக்க – ஈரான் முரண்பாடு இவ் உலகின் 3ம் உலக யுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தது. ஈராக் சென்ற ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி அமெரிக்கா கொன்றது. ‘இதற்கு பழிக்கு பழி வாங்குவோம்’ என ஈரான் கூறியிருந்தது. இந்த சம்பவத்தால் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை ஒன்று உருவாகியிருந்தது.இதற்கிடையே ஈரானுக்கு ஆதரவாக ஈராக்கும் அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்கத் துவங்கியது.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை ஒடுக்குவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கூட்டுப் படைகள் ஈராக்கில் முகாமிட்டன. அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட வீர்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.ஈரானுக்கு எதிரான நடவடிக்கையை அடுத்து ‘எங்களுடைய நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும்’ என ஈராக் கூறியது.இது தொடர்பாக அந்நாட்டு பார்லி.,யிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஈராக்கின் அல் ஆசாத் மற்றும் இர்பில் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. ஜனவரி 7 அன்று மாலையில் இந்த தாக்குதல் துவங்கியது. ஈரான் ராணுவம் 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தியதாகவும் அதில் 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் ஈரான் ‘டிவி’க்கள் செய்தி வெளியிட்டன. ‘ஈரான் 22 ஏவுகணைகளை செலுத்தியது. ஆனால் ஈராக் வீரர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை’ என ஈராக் அரசு செய்தி வெளியிட்டுள்ளது.இந்த தாக்குதல் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி ”இது அமெரிக்காவின் முகத்தில் விழுந்த அறை” என குறிப்பிட்டார். ‘தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக ஈரான் அரசு எங்களுக்கு தகவல் தெரிவித்தது’ என ஈராக் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மூத்த அதிகாரிகள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். ‘நடப்பவை எல்லாம் நல்லதுக்கே. தாக்குதலில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஆய்வு செய்கிறோம். இந்தப் பிரச்னை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன்’ என சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் டிரம்ப் கூறியிருந்தார்.இதற்கிடையே கத்தார் நாட்டின் அரசர் ஷேக் தமிம் பின் ஹமால் அல் தானி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல் உள்ளிட் டோருடன் டிரம்ப் பேசினார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் போம்பியோவும் பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் பேசி வருகிறார்.கடந்த சில நாட்களாக இரு தரப்பும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அடுத்தது என்ன நடக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ‘ஈராக், ஈரானுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்’ என இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தங்களுடைய குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. அதேபோல் இந்த நாடுகளின் வான் எல்லையை தவிர்க்குமாறு விமான நிறுவனங்களுக்கும் உத்தர விடப்பட்டுள்ளது. வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள அமெரிக்க – ஈரான் போர் பதற்றம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

04. #சீன #தேசத்தை #மிரட்டும் #கொரோனோ #வைரஸ்.

2020 ஜனவரி இறுதிப் பகுதி உலகை அச்சத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்று விட்டது என்றால் அது மிகையாகாது.

சீனாவில் அண்மையில் ஏற்பட்டுள்ள மிகக்கொடூரமான கொரோனா வைரஸ் தாக்குதலால் சீன தேசம் அல்லாடுகின்றது.அந் நாட்டின் உஹான் நகரம் சீல் வைக்கப்பட்டுள்ளது.இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வலி தாங்க முடியாமல் கீழே விழுந்து துடிதுடித்து அங்குள்ள மக்கள் உயிர்விடும் வீடியோக்கள் பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்க வைக்கிறது.கொரோனா வைரஸ் தாக்கியுள்ள பகுதிகளுக்குள் யாரும் உள்ளே நுழைவதற்கும்,அங்கிருந்து யாரும் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் நாய்க்கறி, பாம்புக்கறி, வவ்வால் கறி உள்ளிட்ட அசைவ உணவுகளின் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவில் மட்டுமல்லாது சீன தேசத்தை சுற்றியுள்ள அண்டை நாடுகளிலும்,நட்பு நாடுகளிலும் கூட கொரோனோ வைரஸின் தாக்கம் பரவியுள்ளது. குறிப்பாக, தாய்வான்,மலேஷியா,இலங்கை,இந்தியா போன்ற நாடுகளிலும் இந்த ஆட்கொல்லி வைரஸின் தாக்கம் பரவியுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இலங்கையில் கூட ஒரு சம்பவம் பதிவாகியிருந்தது. இறுதியில் கொரோனோ வைரஸ் இந்திய தேசத்தையும் ஆக்கிரமித்தது. இந்தியாவில் ஒரு சம்பவம் கடந்த சில மணி நேரங்களுக்கு முதல் பதிவாகியுள்ளதாக இந்திய செய்தித் தளங்கள் அறிவித்துள்ளது. கொரோனோ வைரஸ் ஆண் கொல்லியினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு சீனாவாகும். அந்த சீன மக்கள் இந்த நோயிலிருந்து மீண்டு பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோம்.

ஒட்டுமொத்தமாக 2020 ஜனவரி மாதத்தை சீர் தூக்கிப் பார்த்தால், ஆரம்பத்தில் இயற்கை அன்னையின் சீற்றத்திற்கும்,இடை நடுவே மனிதனின் தாசி அரசியல் வேட்கையின் மோகத்திற்கும், இறுதியில் இறைவனின் கோபத்திற்கும் ஆட்பட்ட ஓர் காலப் பகுதியாகவே இந்த 2020 ஜனவரி இருந்துள்ளது என்றால் அக் கூற்று மிகையாகாது.

UMAR.HAZANI,
FACULTY OF ARTS AND CULTURE,
ARCHEOLOGY DEPARTMENT,
1ST YEARA STUDENT,
EASTERN UNIVERSITY,
SRILANKA.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *