சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற விமானியின் அவசர தகவலால் பதற்றம்

சீனாவின் வுகான் மாநிலத்தில் சிக்கியுள்ள, வெளிநாட்டவர்களை காப்பாற்ற அந்தந்த நாடுகள் பெரும் முனைப்பு காட்டி வருகிறது. #அமெரிக்கர்களை உடனடியாக அன் நகரில் இருந்து மீட்டு அவர்களை அமெரிக்கா கொண்டு வர என, ஒரு தனி #விமானத்தை ரம் அனுப்பி இருந்தார். குறித்த விமானம் வுகான் விமான நிலையத்தில் தரையிறங்கி, அங்குள்ள நூற்றுக் கணக்கான அமெரிக்கர்களை ஏற்றிக்கொண்டு கடந்த 11 மணித்தியாலங்களாக பறந்த நிலையில். அது லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம் செல்ல இருந்தது. ஆனால் நிலமை தலை கீழாக மாறியுள்ளது.
விமானி கொடுத்த ஒரு தகவலை அடுத்து, அந்த அமெரிக்க விமானம் தற்போது அமெரிக்காவில் உள்ள ராணுவ தளம் ஒன்றுக்கு செல்வதாகவும். பயணிகள் விமான நிலையம் செல்லவேண்டாம் என்று தாம் கட்டளையிட்டுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு துறை  அறிவித்துள்ளது. குறித்த விமானத்தை ஓட்டும் விமானிகள் முக கவசம் அணிந்தவாறு, விமானத்தை செலுத்தி வருவம் புகைப்படங்கள் வெளியாகி மேலும் அதிர்சியை கிளப்பியுள்ளது.
அமெரிகர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்கா நோக்கி வந்த விமானத்தில், சிலர் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இதனை தான் விமானி தெரிவித்தாரா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது. இன் நிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், சீனாவுக்கான தனது முழு சேவைகளையும்  ரத்துச் செய்வதாக அறிவித்துள்ளது. வுகான் மாநிலத்தில் சிக்கியுள்ள பிரித்தானியர் அனைவரையும் ஏற்றிவர என, பிரித்தானிய விமானம் ஒன்று இன்று சீனா நோக்கி செல்லவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *