பிரபல பாடசாலை மாணவி குழந்தை பிரசவிப்பு விசாரணையில் திடுக்கிடும் தகவல்

#அக்கரபத்தனை #பிரதேசத்தில் #பிரபல #பாடசாலை #மாணவி #குழந்தை #பிரசவித்துள்ளார் #விசாரனையில் #திடுக்கிடும் #தகவல்.
26.01.2020 அன்று திடீர் வயிற்றுவலி காரணமாக நுவரெலிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட வேலை உயர்தர மாணவி சிசுவொன்றை ஈன்றெடுத்துள்ளார். இதன் பின்னர் நடாத்தப்பட்ட விசாரனையின் பின்னர் அதிர்ச்சித் தகவல் வெளியானது இது குறித்த விசாரித்த போதே அக்கரபத்தனை பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலையில் உயர்தரம் (கலைப்பிரிவில்) கற்பிக்கும் 35 வயதுடைய தமிழ் பாட ஆசிரியர் பெல்மோரல் பிரதேசத்தைச் சேர்ந்த உயர்தர மாணவியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று மேலதிக வகுப்புகளை நடத்தியிருக்கின்றார் அதுமட்டுமின்றி குறித்த ஆசிரியர் வினாத்தாள் திருத்துவதற்காக தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச்சென்றே தன்னுடைய காம பசிக்கு மாணவியை பலியாக்கியுள்ளார் . இதனால் கர்பமடைந்த அம்மாணவி பாடசாலையை விட்டு இடைவிலகியதோடு தான் தாயாகப்போகும் விடயத்தையும் பெற்றோரிடமிருந்து மறைத்துள்ளார். விபரமறியாத பெற்றோர் 25.01.2020 அன்று குறித்த மாணவிக்கு ஏற்பட்ட திடீர் வயிற்றுவலியின் பின்னர் #மன்ராசி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது அவரது நிலையை கருத்திற் கொண்டு நுவரெலியா வைத்திய சாலைக்கு இடமாற்றப்பட்டார். அதன் பின்னரே அம் மாணவி குழந்தையொன்றை பிரவித்துள்ளார். பின்னர் மர்ம தகவல் அறிந்து ஆசிரியர் அம்மாணவியின் குடும்பத்தை அச்சுறுத்தியதையடுத்து மாணவியின் பெற்றோர்கள் அக்கரபத்தனை பெல்மோரல் பிரதேச பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளனர். குறித்த ஆசிரியர் பெல்மோறல் பிரதேசத்தை அண்டிய பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரையும் ஏற்கனவே காதலித்து வந்த விடயமும் அம்பலமாகியுள்ளது. ஆசிரியரின் இவ்வாறான பிற்போக்குத்தனமான செயலால் பாடசாலை பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதோடு பிரபல பாடசாலையின் அதிபர் மற்றும் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் தலைக்குணிவையும் இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நபருக்கு எதிரா சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதோடு ஒரு புறம் வறுமை, பெற்றோரின் குடிபழக்கம் என பாடசாலை மாணவர்களின் கல்விநிலை பாதிக்க மறுபுறம் இவ்வாறான சம்பவம் பிரதேச வாசிகளிடையே பெறும் அதிர்ப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவல் – அசோக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *