கட்சித் தலைவராக சஜித்? இன்று பிற்பகல் தீர்மானம்

ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (30) பிற்பகல் 3 மணிக்கு சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு செயற்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.தலைமைத்துவப் பிரச்சினையால் ஐக்கிய தேசியக்கட்சி இரு அணிகளாக பிரிந்துள்ளது.

கட்சி தலைமைப்பதவி சஜித்துக்கு வழங்க வேண்டும் என சஜித் அணியும், பொதுத்தேர்தலின் பின்னரே தலைமைப்பதவியில் மாற்றம் இடம்பெறுவது பற்றி பரீசிலிக்க வேண்டும் என ரணில் அணியும் வலியுறுத்திவருகின்றன.

அத்துடன், பொதுவெளியில் இரு அணிகளும் கடும் சொற்சமரில் ஈடுபட்டுவருகின்றன.மறுபுறத்தில் கட்சியை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் மூத்த உறுப்பினர்கள் சிலர் ஈடுபட்டுவருகின்றனர்.

இவ்வாறானதொருபின்புலத்திலேயே மத்திய செயற்குழு இன்று கூடுகின்றது. தலைமைத்துவப் பிரச்சினை, அரசியல் கூட்டணி உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளன.

குறிப்பாக தலைமைத்துவப் பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்றக் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தின் பிரகாரம் தீர்மானம் எடுக்கப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

எனினும், 2023 வரையில் கட்சித் தலைமைப்பதவியை விட்டுக்கொடுக்க ரணில் தயாரில்லை என்றும், கூட்டணியின் தலைமைப்பதவியை சஜித்துக்கு வழங்குவதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *