பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஹெலி விபத்தில் பலி

பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் தனது மகளுடன் உயிரிழப்பு!-ஹெலிகொப்டர் தீப்பற்றியதால் நடந்த விபத்து
அமெரிக்க கூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant தனது மகள் மற்றும் மூவருடன் சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கலிபோர்னியாவின் கலாபாசஸில் ஞாயிற்றுக்கிழமை காலை ஹெலிகொப்டர் விபத்தில் Kobe Bryant(41) மற்றும் அவரது 13 வயது மகள் கியானா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
கூடைப்பந்து ஜாம்பவான் பிரையன்ட் தனது தனிப்பட்ட ஹெலிகொப்டரில் விபத்துக்குள்ளானபோது, மகள் ‘கியானா’ உட்பட நான்கு பேருடன் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹெலிகொப்டரின் எஞ்சின் கீழே இறங்குவதற்கு முன்பு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டதாக சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த ஹெலிகொப்டரானது வானத்தில் 10 முறை வட்டமிட்டதாகவும், அதன் பின்னர் நெருப்பு கோளமாக தரையில் பதித்ததாகவும் தெரியவந்துள்ளது.
விபத்து ஏற்பட்டபோது கூடைப்பந்து பயிற்சிக்காக தவுசண்ட் ஓக்ஸில் உள்ள மாம்பா அகாடமிக்கு Kobe Bryant சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
Kobe Bryant மற்றும் Vanessa தம்பதிக்கு மொத்தம் நான்கு பெண் பிள்ளைகள். அதில் கியானா என்பவரே இன்று விபத்தில் தந்தையுடன் உயிரிழந்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு கூடைப்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற Kobe Bryant தமது விளையாட்டு வாழ்க்கையின் 20 ஆண்டு காலத்தை Los Angeles Lakers அணியுடன் பகிர்ந்து கொண்டார்.
NBA வரலாற்றில் மொத்தம் 20 தொடர்களில் பங்கேற்று விளையாடிய ஒரே ஒரு வீரர் Kobe Bryant என்பது மட்டுமின்றி, 18 முறை All-Star பட்டங்களையும் பெற்றவர்.
இவர் Kobe and Vanessa Bryant Family Foundation-குடும்ப அறக்கட்டளை எனும் அமைப்பினை உருவாக்கி உள்நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும் தேவைப்படும் இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், இளைஞர்கள் விளையாட்டு மூலம் சுறுசுறுப்பாக இருக்க ஊக்குவிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் ஒருவர்.
கல்வி மற்றும் கலாச்சார செறிவூட்டல், வாய்ப்புகள் மூலம் சமூகங்களை வலுப்படுத்துவதற்காக அறக்கட்டளை நிதி உதவிகளை வழங்குவது மாத்திரமல்லாது தனித்துவமான திட்டங்களை உருவாக்கி அதன் மூலம் பல சமூகங்களுக்கு உதவிகளை வழங்கி நல்லதொரு சேவையாளனாக திகழ்ந்த ஒரு விளையாட்டு வீரர் Kobe Bryant என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *