பேஸ்புக் காதலால் நடந்த விபரீதம் மாணவியின் வீடியோ வெளியீடு?

மாணவியின் நிர்வாண வீடியோ! காதலனோடு, நண்பர்களும் சேர்ந்து சீரழித்த சோகம்! பேஸ்புக் காதலால், பாலியல் துஷ்பிரயோகம்

போபாலின் பிஹெல் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை இரண்டு பேர் மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதற்கு அடுத்த நாளே அந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விட்டனர். இது குறித்து தெரிவித்த காவல் துறையினர், ஆரம்பத்தில் இந்த குற்றத்தைப் பற்றி பேசுவதற்கே அந்த மாணவி தயாராக இல்லை.

மிகுந்த பயத்துடனும், அதிர்ச்சியிலும் இருந்தாள். எங்களிடம் பேசும் போது கூட, என்னுடைய நிர்வான வீடியோவை அவர்கள் வெளியிட்டு விடுவார்கள் என்று அழுதபடியே பயத்தில் இருந்தாள்’ என்றனர்.

மிகத் தீவிரமான கவுன்சிலிங் கொடுத்ததற்குப் பிறகு தான் அவர் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதற்கு சம்மதித்தாள். புகார் பெற்ற அடுத்த 6 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைப் பிடித்து விட்டோம் என்கிறார் கோவிந்த்புரா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அசோக் சிங்.

தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறாள் அந்த மாணவி. வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில், தன்னுடைய வகுப்புத் தோழன் ஒருவனுடன் அந்த மாணவி வீட்டின் படுக்கையறையில் தனிமையில் இருந்துள்ளார்.

இவர்கள் இருவரும் நிர்வாண நிலையில் இருக்கும் காட்சிகளை குற்றம் சாட்டப்பட்ட இருவரான ராம் பாபு, மற்றும் ராகேஷ் ராஜ்பூர் ஆகிய இருவரும் இவர்களுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து விட்டு, வந்த அடையாளமே தெரியாதது போல் அங்கிருந்துச் சென்று விட்டனர்.

பின்னர், மாணவியின் வகுப்புத் தோழன் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றதும், குடிபோதையில் இவர்கள் இருவரும் மீண்டும் மாணவியைத் தேடிச் சென்றுள்ளனர்.

பின்னர் மாணவியிடம் தாங்கள் நிர்வாண நிலையில் படம்பிடித்த வீடியோவை செல்போனில் போட்டுக் காட்டி, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டும், மாணவியின் பெற்றோர்களிடம் காட்டப் போவதாகவும் மிரட்டியுள்ளனர்.

செய்வதறியாது பயந்து நின்ற மாணவியை தங்களது பாலியல் இச்சைகளுக்கு அடிபணிய வைத்து இருவரும் அந்த மாணவியைத் தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்.

அடுத்தடுத்த நாட்களிலும் இந்த பலாத்காரம் தொடர்ந்துள்ளது. இரு தினங்கள் கழித்து ஊருக்குச் சென்றிருந்த பெற்றோர் திரும்பி வந்ததும், கண்ணீர் மல்க நடந்த கொடுமைகளை மாணவி சொல்லியிருக்கிறாள். அவர்கள் துணிச்சலாக காவல் நிலையத்திற்கு மாணவியை அழைத்து வந்தனர்’ என்றனர்.

இதில் இன்னொரு அதிர்ச்சி, கைதான அந்த இருவருமே மாணவியின் வகுப்புத் தோழனின் நண்பர்கள் என்றும், வகுப்புத் தோழன் இந்த இருவரிடமும், மாணவியைப் பற்றியும், மாணவியின் பெற்றோர் ஊருக்குச் சென்றிருக்கும் விபரத்தையும், தான் தனிமையில் மாணவியுடன் உல்லாசமாக இருந்து வருவதையும் சொல்லியிருந்ததால், அவர்களும் துணிச்சலாக இந்த செயலலில் ஈடுபட்டிருந்தனர் என்கிற தகவலைக் கேட்டு காவல்துறையினர் ஆடிப் போனார்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்ததாக ஒப்புக் கொண்டதை அடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டனர் என்று காவல் அதிகாரி கூறினார்.
பெற்றோர்களே.. வயதுக்கு வந்த மகனையோ, மகளையோ தனிமையில் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் விட்டுச் செல்லாதீர்கள். சுற்றிலும் கயவர்கள் நிறைந்த சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *