கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தால் 90000 பேர் பாதிப்பு?

90000 பேர் பாதிப்பு???

சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து முதல் முறையாக கொரோனா என்ற கொடிய வைரஸ் வவ்வாலை உணவாக கொள்ளும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக பரவியது.
இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் உணவாக உட்கொள்வதால் மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது.

ஒருவர் மூலம் மற்றொருவருக்கு பரவும் இந்த கொரோனோ வைரசுக்கு 56 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1970 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மனிதரிடமிருந்து மனிதருக்கு நேரடியாக பரவும் இந்த வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளதாக பெண் செவிலியர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

வைரஸ் பாதிப்பு முதலில் கண்டறியப்பட்ட வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றுவதாக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அந்த செவிலியர் கூறியதாவது:-

’’இந்த வீடியோவை பார்க்கும் மக்கள் அமைவருக்கும் வணக்கம். நான் இப்போது கொரோனோ வைரஸ் எங்கு கண்டறியப்பட்டதோ அந்த இடத்தில் இருந்து பேசுகிறேன்.

கோரோனோ வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்
நான் இங்கு உங்களிடம் உண்மையை பேச வந்துள்ளேன். சீனாவில் தற்போதுவரை கொரோனோ வைரசுக்கு 90 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொரோனோ வைரஸ் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்? வைரஸ் பாதிக்கப்பட்ட நபரை தனிமைபடுத்தி உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால் ஒரே சமயத்தில் 14 பேருக்கு இந்த வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தும்.

தற்போது சீன புத்தாண்டு (ஜனவரி 25) பிறந்துள்ளது. ஒவ்வொரு சீனரும் தனது சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தினருடன் உணவருந்தி புத்தாண்டை கொண்டாட வேண்டுமென விரும்புகின்றோம்.

இருந்தபோதிலும், தற்போது நாம் மிகவும் அசாதாரண சூழ்நிலையில் உள்ளோம்.
இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் நான் கூறுவது என்னவென்றால், உங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாதீர்கள். எந்த கொண்டாட்டங்களிலும் ஈடுபட வேண்டாம். வெளியே சென்று எந்த உணவும் சாப்பிட வேண்டாம். ஆண்டுக்கு ஒருமுறை நாம் சீன புத்தாண்டை கொண்டாடுகிறோம்.

நீங்கள் இப்போது பாதுகாப்பாக இருந்தால்தான் அடுத்த புத்தாண்டின் போது உங்கள் குடும்பங்களை சந்திக்க முடியும்.
மருத்துவ வசதிகளை பொருத்தவரை சீன அரசாங்கள் என்ன சொல்கிறது என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

சமூக வலைதளம் மூலமாக நான் கூறுவது என்னவென்றால், அனைவரும் வுகான் மாகாணத்திற்கு முகமூடி, முகக்கண்ணாடி, துணிகளை நன்கொடையாக வழங்குங்கள்.
தற்போது மருத்துவமனைகளில் தேவையான பொருட்கள் மிகவும் குறைவாகவே உள்ளது.

தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள். முகமூடி, முகக்கண்ணாடி, துணிகளை தாருங்கள். வுகானில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள மருத்துவர்கள் இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருப்பதை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். நமக்கான நேரம் மிகவும் குறைவாக உள்ளது.

நான் மீண்டும் சொல்கிறேன் சீன புத்தாண்டின் போது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். எனது அம்மா மற்றும் எனது குடும்பம் உடல்நலத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவே நான் இங்கு கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
நான் சொன்னது உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் இதை பகிருங்கள். நிலைமையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த தகவல்களை சீன அரசாங்கம் மிகவும் ரகசியமாக வைத்துள்ளது. கொரோனோ வைரஸ் தற்போது இரண்டாம் நிலைக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். முதல் நிலையில் வைரஸ் அறிகுறிகளை குணப்படுத்திவிடலாம். ஆனால் இரண்டாம் நிலையில் மிகவும் அபாயகரமான நிகழ்வுகள் வரப்போகிறது.

ஏனென்றால் வைரஸ் உங்களை மட்டுமல்லாமல் சுற்றியுள்ளவர்களையும் ( குறைந்தது 10 பேரையாவது) பாதிக்கும். இதன் மூலமாகவே இந்த வைரஸ் பரவுகிறது. ஒருபோதும் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள். வெளியே உணவுகளையும் சாப்பிடாதீர்கள். நன்றி’’.
இவ்வாறு செவிலியர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *