உலகின் இறுதிப் பாதை இலங்கையில்

#இலங்கையில் உலகின் #இறுதிப்பாதை

உலகின் இறுதிப்பாதை என வர்ணிக்கப்படும் Bakers Bend பலாங்கொடை நகரத்திலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்தில் உள்ள பதுளை நகர் நோக்கி ஏ4 சாலையில் பயணிக்கும்போது, ​​நான்பீரியல் எனும் பகுதியைக் காண்பீர்கள். அதன் மேலே செல்லும் வழியில், பேக்கர்ஸ் வளைவைக் காணலாம், பேக்கரின் வளைவு எனப்படும் இது அந்த சாலையின் 23 வது வளைவு ஆகும்

பேக்கர்ஸ் பெண்டிற்கு அதன் பெயர் எப்படி வந்தது என்ற வரலாற்றை ஆராய்ந்தால் அப்போதைய பிரிட்டிஷ் கவர்னராக இருந்த சாமுவேல் பேக்கர் என்பவர் இந்த வளைவுலேயே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது அவரின் நினைவாகவே இந்த வளைவு நிர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த பயணத்தை குடும்பத்தோடு செல்ல நீங்கள் தீர்மானித்தால் முதலில் நீங்கள் தெரிவு செய்வ வேண்டியது சிறந்த ஒரு 4WD வாகனத்தை தான் மாருதி , ஆல்ட்டோ போன்ற சிறிய ரக வாகனங்களை தவிர்ப்பது நல்லது ,

தனியாக நண்பர்களுடன் செல்வதாயின் சிறந்த நிலையில் உள்ள மோட்டார் சைக்கிள்கள் இந்த பயணத்தை சிறந்த ஒரு Adventure பயணமாக மாற்றும்.

அடுத்ததாக Bakers Bend அடைவதற்கு 3கிலோ மீற்றர் தொலைவில் ஒரு தனியார் எஸ்டேட் சாலை வாயில் உள்ளது அவ் இடத்தில் உங்கள் வாகனங்களை சில சமயங்களில் உள்ளே விட காவலர்கள் அனுமதிக்க மாட்டார்கள் அவ்வாறு அனுமதி மறுத்தால் அங்கே வாகனத்தை நிறுத்தி விட்டு நீங்கள் நடைபவணியாகவே 3KM ஐ கடக்க வேண்டி ஏற்படும்

அந்த 3KM நடைபவணியிலும் கடல் மட்டத்திலிருந்து 1700 மீ (5000 அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்த இடத்தின் பட்டாம்பூச்சி நீர்த்தேக்கம் உள்ளிட்ட பல அழகான இயற்கையின் பிரம்பிப்புக்களை காலநிலை தெளிவாக உள்ள ஒருநாளில் கண்டுகளிக்கலாம்

🛑பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் அல்லது இரத்தினபுரி பமன்காட் தோட்ட காரியாலயத்தில் அனுமதி பெற்றால் மாத்திரமே இங்கு செல்ல முடியும்.

இந்த பயணம் உங்களுக்கு சிறந்த ஒரு Adventure பயண அனுபவங்களை தரும் என எதிர்பார்க்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *