சீனாவில் வேகமாகப் பரவி வரும் வைரஸ் நோய் காரணமாக அவசர நிலை பிரகடனம்

உலக சுகாதார ஸ்தாபனத்தால் சீனாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி 26 பேர் உயிரிழந்துள்ளமையால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய ரீதியில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்திற்குட்பட்ட 830 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

நாளைய தினம் (25) சீனாவில் புதுவருடம் கொண்டாடப்படவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சத்தினால் பொது நிகழ்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், சீனாவின் மத்திய மாகாணத்திலுள்ள 10 நகரங்களில் சுற்றுலாத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் 20 மில்லியன் பேர் வரை வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *