சடலங்களும் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி

90 நாட்களுக்குள் ஆசிய கண்டத்தை சேர்ந்த அனைவரும் வெளியேறவேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். ஆறடி நாலங்குல உயரமும், 135 கிலோ எடையும் கொண்ட இடி அமீன் உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

தேசிய குத்துச்சண்டை பட்டம் வென்ற இடி அமீன் 1971ஆம் ஆண்டு, மில்டன் ஒபோடேவை ஆட்சியில் இருந்து அகற்றி அதிகாரத்தை கைப்பற்றினார்.

தனது எட்டு ஆண்டு கால ஆட்சியில், இதற்கு முன் கேள்விப்பட்டிராத வகையில் கொடூரமாக நடந்துக் கொண்ட இடி அமீன், நவீன வரலாற்றின் கொடுங்கோல் ஆட்சியாளர்களில் முன்னணியில் இருக்கிறார்.

1972ஆம் ஆண்டு, இடி அமீன் கனவு ஒன்றை கண்டார். அதில் ஆசியர்கள் அனைவரையும் உகாண்டாவில் இருந்து வெளியேற்று என்று அல்லா ஆணையிட்டார். அதையடுத்து இடி அமீன் வெளியிட்ட உத்தரவில், ‘உகாண்டாவின் அத்தனை பொருளாதார பிரச்சனைகளுக்கும் ஆசியர்கள்தான் காரணம். அவர்கள் உகாண்டா மக்களுடன் இணைந்து வாழ எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. நாட்டை சுரண்டுவதுதான் அவர்கள் விருப்பம். இன்னும் 90 நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் அத்தனை ஆசியர்களும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்!’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இடி அமீன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆசியர்களை வெளியேற்றும் அறிவுரையை சொன்னவர் கடாஃபி

இடி அமீனின் இந்த உத்தரவை ஆசிய மக்கள் முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவசரத்தில் இப்படி உத்தரவிட்டிருக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் இடி அமீனின் உத்தரவை நிறைவேற்றுவது கட்டாயம் என்பதை சில நாட்களிலேயே அவர்கள் புரிந்துக் கொண்டனர்.

ஆசியர்களை வெளியேற்றவேண்டும் என்பது அல்லாவின் உத்தரவு என்பதை பலமுறை இடி அமீன் கூறியிருக்கிறார். ஆனால் இடி அமீனின் ஆட்சியைப் பற்றி ‘கோஸ்ட் ஆஃப் கம்பாலா’ என்ற புத்தகத்தை எழுதிய ஜார்ஜ் இவான் ஸ்மித், தனது புத்தக்கத்தில் வேறொரு கருத்தை குறிப்பிடுகிறார்.

இடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி
இடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி

லிபியாவின் சர்வாதிகாரி கர்னல் கடாஃபி, இடி அமீனை சந்தித்தபோது, ‘உகாண்டாவை கட்டுபாட்டில் கொண்டு வர விரும்பினால், முதலில் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்; லிபியாவில் இருந்து இத்தாலியர்களை வெளியேற்றியதுபோல், ஆசியர்களையும் உகாண்டாவில் இருந்து வெளியேற்றவேண்டும்’ என ஆலோசனை சொன்னார்.

55 பவுண்டுகள் மட்டுமே எடுத்துச் செல்லமுடியும்

ஆசியர்களை வெளியேறுமாறு இடி அமீன் அறிவித்ததற்கு பிறகு, பிரிட்டன் அமைச்சர் ஜியாஃப்ரி ரிபன், கம்பாலாவுக்கு சென்று அமீனினுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவரது முடிவை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் ரிபன் அங்கு சென்றபோது, அமீனுக்கு பல வேலைகள் இருப்பதால் அடுத்த ஐந்து நாட்களுக்கு பிரிட்டன் அமைச்சரை சந்திக்க முடியாது என்று கூறிவிட்டார்.

இடி அமீன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ரிபன் லண்டன் திரும்ப முடிவெடுத்தார். அதிகாரிகள் அமீனுக்கு நிலைமையை எடுத்துச் சொல்லி புரியவைத்த பின், பிரிட்டன் அமைச்சர் ஜியாஃப்ரி ரிபனை, அவர் நாட்டுக்கு வந்த நான்காவது நாளன்று இடி அமீன் சந்தித்தார். ஆனால் சந்திப்பினால் எந்த நன்மையும் ஏற்படவில்லை.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இந்திய அரசு, இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி நிரஞ்சன் தேசாயை கம்பாலாவுக்கு அனுப்பியது. ஆனால் இடி அமீன் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

அந்த காலகட்டத்தை நிரஞ்சன் தேசாய் நினைவுகூர்கிறார், “நான் கம்பாலா சென்றடைந்தபோது அங்கு பதற்றம் நிலவியது. உகாண்டாவில் வசித்த ஆசியர்களில் பலர் வேறு எங்குமே சென்றதில்லை. நாட்டில் இருந்து வெளியேறும்போது, 55 பவுண்டு பணம் மற்றும் 250 கிலோ பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்லவேண்டும் என்ற உத்தரவும் இருந்தது. கம்பாலாவைத் தவிர, உகாண்டாவின் பிற பகுதிகளில் வசிக்கும் ஆசியர்கள் யாருக்கும் இந்த நிபந்தனைகள் பற்றி தெரியாது.

தங்கத்தை புதைத்து மறைத்த மக்கள்

இடி அமீனின் இந்த அறிவிப்பு திடீரென்று வெளியானது. அந்நாட்டு அரசும் உத்தரவை செயல்படுத்த தயார் நிலையிலும் இல்லை. சில பணக்கார ஆசியர்கள் தங்கள் செல்வத்தை செலவளிக்க புது வழிகளை தேடினார்கள்.

‘பணத்தை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாவிட்டால், ஆடம்பரமாக செலவு பண்ணி தீர்க்கலாம் என்று சிலர் முடிவெடுத்தார்கள். சில புத்திசாலிகள் பணத்தை வெற்றிகரமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதில் வெற்றி அடைந்தார்கள். முழு குடும்பமும் உலகம் முழுவதும் சுற்றுலா செல்வதற்கு முதல் வகுப்பு பயணச்சீட்டு வாங்குவது பணத்தை செலவு செய்வதற்கான சுலபமான வழியாக இருந்தது. அதில் எம்.சி.ஓ மூலம் தங்கும் இடம் போன்ற எல்லா செலவுகளுக்கும் முன்பணம் செலுத்திவிட்டார்கள்’ என்கிறார் நிரஞ்சன் தேசாய்.

“பல்வேறு கட்டணங்களை செலுத்தும் (miscellaneous charges order) எம்.சி.ஓ என்பது பழைய பாணியிலான விமான பயணச்சீட்டு போன்றது. உகாண்டாவில் இருந்து கிளம்பிய பிறகு, அதை ரத்து செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். சிலர் தங்கள் காரின் கார்பெட் விரிப்புக்கு கீழே நகைகளை மறைத்து, அண்டை நாடான கினியாவுக்கு கொண்டு சென்றனர். சிலர் தங்கள் நகைகளை பார்சல் மூலமாக இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்கள். சிறிது காலத்தில் உகாண்டாவுக்குத் திரும்பலாம் என நம்பிய சிலர், தங்கள் வீட்டுத் தோட்டத்தில் நகைகளை புதைத்து வைத்தார்கள். இன்னும் சிலர் பரோடா வங்கியின் உள்ளூர் கிளையில் பெட்டகங்களை (லாக்கர்களை) பெற்று அதில் தங்கள் நகைகளை பாதுகாப்பாக வைத்தனர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அப்படி கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர். அவர்களில் சிலர் 15 வருடங்கள் கழித்து உகாண்டாவுக்கு சென்றபோது, நகைகள் வங்கி பெட்டகத்தில் பாதுகாப்பாகவே இருந்தது.’

விரலில் இருந்த மோதிரம் வெட்டி எடுக்கப்பட்டது

தற்போது லண்டனில் வசிக்கும் கீதா வாட்ஸ் அந்த காலகட்டத்தை நினைவுகூர்கிறார். லண்டன் செல்வதற்காக எண்டெபே விமானநிலையத்தை அடைந்தார் கீதா வாட்ஸ்.

”வெறும் 55 பவுண்ட் பணம் மட்டுமே எடுத்துச் செல்லவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. நாங்கள் விமானநிலையத்தை அடைந்தபோது தங்கத்தை கொண்டு செல்கிறோமா என்று சோதனை செய்வதற்காக பைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெளியில் எடுத்து வீசப்பட்டது” என்று சொல்கிறார் கீதா வாட்ஸ்.

இடி அமீன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

”என் கையில் இருந்த தங்க மோதிரத்தை கழற்றித் தருமாறு சொன்னார்கள். விரலில் இருந்து மோதிரத்தை கழற்றமுடியவில்லை. கடைசியில் அவர்கள் என் மோதிரத்தை கத்தியால் வெட்டி எடுத்துக் கொண்டார்கள். மோதிரத்தை விரலில் இருந்து வெட்டும்போது, எங்களைச் சுற்றிலும் ஆயுதங்களுடன் உகாண்டா வீரர்கள் நின்றது அச்சத்தை அதிகரித்தது’ என்று அந்த நாள் நினைவுகளை நினைவுகூர்கிரார் கீதா வாட்ஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *