11 இளைஞர்கள் காணாமல் போனவர்கள் சம்பந்தப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் அழைப்பு

முன்னாள் இராணுவத்தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேரையும் நாளை மறுதினம் (24) மன்றில் ஆஜராகுமாறு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல்நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது.

11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு தொடர்பிலேயே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் தொடரப்பட்டிருந்த வழக்கை விசாரித்த ஷம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க உள்ளிட்ட விசேட மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது.

இதற்கிணங்க, நாளை மறுதினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் இராணுவத்தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ரியல் அட்மிரல் T.K.P. தசநாயக்க உள்ளிட்ட 14 பேருக்கும் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *