வடக்கு, கிழக்கில் தபால் மூல வாக்களிப்பில் சஜித் முதலிடம்!

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்ற நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 5 தேர்தல் மாவட்டங்களிலும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ முதலிடம் பெற்றுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தபால் மூல வாக்களிப்பில் மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகளை விடவும் சஜித் பிரேமதாஸ அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்.

01) யாழ்ப்பாணம் மாவட்டம் (யாழ். + கிளிநொச்சி)

* சஜித் பிரேமதாஸ – 17,961
* கோட்டாபய ராஜபக்ச – 1,563

02) வன்னி மாவட்டம் (முல்லைத்தீவு + வவுனியா + மன்னார்)

* சஜித் பிரேமதாஸ – 8,402
* கோட்டாபய ராஜபக்ச – 1,703

03) திருகோணமலை மாவட்டம்

* சஜித் பிரேமதாஸ – 7,871
* கோட்டாபய ராஜபக்ச – 5,089

04) மட்டக்களப்பு மாவட்டம்

* சஜித் பிரேமதாஸ – 9,221
* கோட்டாபய ராஜபக்ச – 1,255

05) அம்பாறை மாவட்டம்

* சஜித் பிரேமதாஸ – 11,261
* கோட்டாபய ராஜபக்ச – 10,831

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *