ரணிலுக்கு முற்கூட்டிய தனது அனுதாபங்களாம்! – கிண்டலடிக்கின்றார் கோட்டா

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முற்கூட்டியே தேர்தல் தோல்விக்கான எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க என்று இன்னமும் அந்தக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. இணையத்தளங்களில்தான் அவ்வாறு செய்திகள் வெளியாகியுள்ளன.

ரணில்தான் வேட்பாளர் என்றால் தேர்தல் தோல்விக்கான எனது அனுதாபங்களை முற்கூட்டியே தெரிவிக்கின்றேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *