இராஜாங்கம் ஒரு ‘சாங்கம்’

இலங்கையின் காலநிலை போன்ற இலங்கையின் அரசியலும் காலம் கடந்த ஞானங்கள் இங்கு அதிகம் செல்வாக்குச் செலுத்துகின்றமை யாவரும் அறிந்த ஒன்றே! எது, எப்போது, எப்படி கிளர்ந்தெழும் என்பது இன்றைய அரசியல் நாகரிகத்தில் ஊகிக்க முடியாத சம்பாசனை.

சரி, ‘எதுவெல்லாம் நடந்துடிச்சு இனியாவது நம்ம பவரக் காட்டுவோமேனு’ ஒருவருக்கு வந்த அழுத்தத்தால் அவர் பதவி விலக ‘நம்ம டிமாண்டு இறங்கி அவர்ர டிமாண்டு கூடிடுமேனு’ என அள்ளி விழுந்த மொத்தமா எல்லோரும் வைத்தார்கள் இராஜிநாமா கையொப்பத்தை!.

இது பசித்திருந்த புலி இறைச்சியைக் கண்ட கதை போல. ஒரு இராஜாங்க அமைச்சரின் அவர் சார்ந்த பிரதேச அரசியல் அவரின் வளர்ச்சிக்குத் தீனி போட்டுவிட்டது. கையாலாகாத அமைச்சை கைப்பற்றிய ஏக்கமும், கையிலெடுத்த அமைச்சால் தான்படும் அவதிகளும் எண்ணிலடங்கா துயரமென எண்ணி ஏகபோக ஏக்கத்துக்கு கொட்டிய மழைதான் இறுதி இராஜிநாமாக்கள்.

தழைத்த மரத்தை வண்டரித்தும் தளர விடாமல் தலைவர் படுகின்ற பாடுகளும் ஏராளம். தாராளமாக ஏமாற்றத் தன்னிடமிருந்த ஆயுதம்தான் இந்த இராஜாங்கம்.

இப்படி இருக்கையில் அரசின் அந்திம காலத்தில் வளங்கள் பகிரப்படும் கெடுபிடிகள் அசுர வேகத்தில் பெருக்கெடுக்கின்றபோது நம்மிடமுள்ள மூன்று துரும்புகளையும் முறுக்கேற கட்டி மெத்துவதே இன்றைய நிலைமை.

இந்த நிலைமையில் பசித்த புலி பகற்சோற்றோடு நின்று விடாமல் இரைமுடியும் வரை உண்ணுவேன் என உறுதி கொண்டுள்ளதாம். பார்த்தார்கள் இவர் பின்னணியில் சென்றால் ‘இருப்பதும் கெட்டுவிடும் இன்றைக்கே நம்முடையத நாமே எடுத்துக் கொள்வோம்’ என்று ஓடோடிச் சென்று பெற்றுவிட்டார்கள்.

இந்த முடிவு சரியானதுதான்! இந்தத் தருணத்தில் முஸ்லிம் எம்.பிக்கள் அமைச்சுப் பதவிகளில் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!! அப்படியொரு சூழலில் இராஜாங்க அமைச்சர் பைசல் காசீம், இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!!!

இனித்தான் இருக்கின்றது பிரச்சினை… ஒற்றையாய் நிற்பவருக்கு அனுதாப வாக்குகள் அள்ளுமா அல்லது அந்தஸ்த்து பெற்றவர்களின் வெகுவான அபிவிருத்திகள் அனுதாபத்தை மிஞ்சுமா?

இன்னுமொரு அரசியல் காலநிலை மாற்றம் வெகு விரைவில்….!

✍️ கியாஸ் ஏ. புஹாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *