தீர்வு இல்லையேல் நாடெங்கும் பெரும் போராட்டம் வெடிக்கும்! – கல்முனையில் கருணா எச்சரிக்கை

அம்பாறை, கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்துக்கு உரிய தீர்வை அரசு வழங்காவிடின், நாடளாவிய ரீதியில் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்று முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) எச்சரித்துள்ளார்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரமும் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துமாறு கோரி முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டக் களத்துக்கு இன்று சென்ற அவர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“இந்தப் பிரச்சினை நீண்டகாலப் பிரச்சினையாக கிழக்கு மாகாணத்தில் இருந்து வருகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கின்ற காலத்தில் இந்த விடயம் குறித்து பேச்சுகள் நடத்தப்பட்டன. இதன்போது தீர்வை வழங்க அவர் முன்வந்தார். எனினும், பல முஸ்லிம் அரசியல் தலைவர்களே அதனைத் தடுத்தி நிறுத்தினர்.

கல்முனைப் பிரதேசத்தை வேறுபடுத்தி இனத்துவேசத்தை இதற்குள் கொண்டுவந்து எங்களைப் பிரிக்க நினைப்பார்களானால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

இதற்கு அரசு தீர்வை வழங்கவில்லையெனில் இலங்கை நாட்டில் முற்றுமுழுதாகப் போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளது” என அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *