தேரரின் உடல்நிலை மோசம்! – முதலுதவி தீவிரம்

சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்த கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, மதகுருமார்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று காலை 9 மணியளவில் ஆரம்பித்திருந்தனர்.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் தெரிவித்துள்ளதாவது:-

“அரசியல்வாதிகளினால் நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றோம். எங்களுக்காகக் குரல் கொடுக்கின்ற அரசியல்வாதிகளைப் பிரதமரும் ஜனாதிபதியும் உதாசீனப்படுத்துகின்றனர். இப்போராட்டத்தை இனவாதத்தை தூண்டும் போராட்டமாக எவரும் பார்க்க வேண்டாம். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் வரை இந்தச் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை” – என்றனர்.

இந்தநிலையில், தேரரின் உடல் நிலை இன்றிரவு மோசமடைந்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *