9 முஸ்லிம் அமைச்சர்கள் இராஜிநாமா: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்!

முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது பதவிகளை இராஜிநாமா செய்தமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

4 அமைச்சர்கள் (ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், கபீர் ஹாசீம், எம்.எச்.ஏ. ஹலீம்), 4 இராஜாங்க அமைச்சர்கள் (பைசல் காசீம், எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ்.எஸ். அமீர் அலி, அலிசாஹீர் மௌலானா), ஒரு பிரதி அமைச்சர் (அப்துல்லா மஹ்ரூப்) ஆகியோர் தங்களது பதவிகளைத் துறந்துள்ளனர் என்று வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சுப் பதவிகளை வகித்த இந்த 9 பேரும் உத்தியோகபூர்வமாக அந்தப் பதவிகளிலிருந்து இன்னமும் விலகவில்லை என சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *