நாளை நண்பகல் வரை அரசுக்குக் காலக்கெடு! – ஞானசார தேரர் அறிவிப்பு

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரைப் பதவி நீக்கம் செய்ய நாளை திங்கட்கிழமை நண்பகல் 12 மணி வரை அரசுக்கு இறுதிக் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது என பொதுபலசேனாவின் அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அறிவித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளுநர்களான அஸாத் ஸாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரை உடனடியாகப் பதவியிலிருந்து விலக்க வேண்டும் எனக் கோரி அத்துரலிய ரத்தன தேரர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்தநிலையில், தேரரை இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து உரையாடிய ஞானசார தேரர், செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“காலக்கெடுவுக்குள் இது நடக்காத பட்சத்தில் அனைத்துப் பிக்குமாரும் களத்தில் இறங்குவார்கள்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *