தொடர் போராட்டத்தால் தேரரின் உடல்நிலை மோசமடைகின்றதாம்!

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரின் உடல்நிலை மோசமடையும் அபாயத்தில் இருக்கின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரை உடனடியாகப் பதவியிலிருந்து ஜனாதிபதி விலக்க வேண்டும் எனக் கோரி அத்துரலிய ரத்தன தேரர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

நேற்றுக் காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணவிரதம் காரணமாக அவரது உடல்நிலை சோர்வடைகின்றது. இதனால் உடல்நிலையில் மோசம் ஏற்படும் அபாயம் இருக்கின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தேரரை இன்று சோதனையிட்டார். இதன்போதே குறித்த வைத்தியர் தேரரின் உடல்நிலை பாதிக்கப்படலாம் என அங்கு நின்றவர்களிடம் கூறியுள்ளார்.

இதேவேளை, அத்துரலிய ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தேரர்கள், சிங்கள மக்கள் மற்றும் சிங்கள – பௌத்த அமைப்பினர் நேரில் சென்று ஆதரவு வழங்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *