அபிவிருத்திகளைப் பெற்று செயற்படுகின்ற நாம் நாட்டுப்பற்றுடன் தேசிய நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும் – இஸ்மாயில் எம்.பி.

அரசாங்கம் எமக்கு வழங்கும் அடிப்படைகளைக் கொண்டு எமது பொருளாதரங்களை விருத்தி செய்யக்கூடிய வல்லமைகளை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். தேவைகளை உணர்ந்து வழங்களை பிரயோகிக்கும் வல்லமைகளை நாம் மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

சம்மாந்துறையிலுள்ள தையல் பயிற்சி நிலையங்களுக்கு இன்று (15) தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், உரையாற்றிய அவர் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் வழங்கப்பட்ட தையல் இயந்திரங்கள் உங்களின் வாழ்க்கைக்கு எந்தளவு உபயோகப்படும் என்பதைவிட அதனை நீங்கள் எவ்வாறு பிரயோகித்து பயனடைய வேண்டும் என்பதே இலக்கு.

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற இவ்வாறான வாழ்வாதார ஊக்குவிப்பு அம்சங்களை உபயோகித்து இனிவரும் காலங்களில் தன்னிறைவடைந்த சமூகமாக நாம் முதலீடு செய்யக் கூடியவர்களாக மாறவேண்டும்.

அரசாங்கம் எவ்வளவு பணங்களை கொடுத்தாலும் அடிமட்ட பொருளாதார நிலைமைகளை உயர்த்திக் கொள்ள வழி வகைகள் செய்யாமல் உள்ளனர். 15 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியில் இவ் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உள்ளநிலையில் உள்ளுர் சந்தை வாய்ப்பு, தேசிய சந்தை வாய்ப்பு இதை விடவும் மேலதிகமாக சர்வதேச சந்தை வாய்ப்பு என பலவித நோக்குடன் நாம் பயனிக்க வேண்டும். அப்போதுதான் எமது பொருளாதாரங்களை உயர்த்திக்கொள்ள வளமாக இருக்கும்.

இப்படியான அபிவிருத்திகளைப் பெற்று செயற்படுகின்ற நாம் நாட்டுப்பற்றுடனும், தேசிய நல்லிணக்கத்துடனும் திறன்பட உழைப்பவர்களாக மாறி உயரிய அடைவு மட்டங்களை கொண்டு செயற்படுவதே சிறப்பு.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையிலும் எம்மால் முடியுமான அபிவிருத்திகளை கொண்டுவருகின்றோம். அவற்றை வளம்மிக்கதாக பயன்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவர் கடமையுமாகும். – என்றார்.

கைத் தொழில் வர்த்தக அமைச்சின் சிபாரிசினால் வழங்கப்பட்ட 30 இலட்சம் பெறுமதியான 40 தையல் உபகரணங்கள் வழங்கும் இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *