விளைவேலி மருதடி விநாயகர் மகோற்சவ பெருவிழா ஆரம்பம் 

சாவகச்சேரி நுணாவில் மேற்கு விளைவேலி மருதடி அருள்மிகு வீரகத்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த திருவிழா எதிர்வரும்  9 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 11 நாட்கள் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய 15 ஆம்திகதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு வேட்டைத்திருவிழாவும், 16 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு புதிய சித்திரத்தேர் வெள்ளோட்டமும் அன்று இரவு  7 மணிக்கு சப்பரத்திருவிழாவும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு தேர்த்திருவிழாவும் மறுநாள் 18 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் 19 ஆம் திகதி யாஜிற்றுக்கிழைமை காலை 10 மணிக்கு பிராயச்சித்த அபிஷேகமும் மாலை 5 மணிக்கு பூங்காவனமும்  20 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு வைரவர் பொங்கலும் இடம்பெறவுள்ளன.
மகோற்சவ பூசைகள் தினமும் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12.30 மணி வரையும் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி இரவு 9.30 மணி வரையும் நடைபெறும். திருவிழா இடம்பெறும் 11 தினங்களும் தினசரி 12.30 மணிக்கு அன்னதானமும் வழங்கப்படும்.
இம்மகோற்சவத்தை  ஆலய பிரதம குரு பண்டிதர்,கலாநிதி,சிவஸ்ரீ து.கு.ஜெகதீஸ்வரக்குருக்கள் தலைமையில் மகோற்சவ குரு கிரியாரத்தினா,சிவாச்சாரியமணி சிவஸ்ரீ ராம் சண்முகானந்தக்குருக்களும் ஆலயகுரு பிரம்மஸ்ரீ சி.ஜெகதீஸ்வர சர்மாவும் சாதகாசிரியர் வித்தியா சாகரம் சிவஸ்ரீ ஜெகதீஸ்வர மயூரக்குருக்களும்  நடத்தி வைப்பார்கள். மாவை ஆதீனம் மகாராஜஸ்ரீ  மாவை து.ஷ.ரத்தினசபாபதிக்குருக்கள் ஆசியுரை வழங்குவார்.
திருவிழா வீ டியோக்கள் ,புகைப்படங்களை www.maruthadyppillayar.com     என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *