பெண் மெய்காப்பாளரை மணந்து அரசியாக்கிய மன்னர்

தனது மெய்காப்பாளர் பிரிவின் துணைத் தலைவரை திருமணம் செய்து கொண்ட தாய்லாந்து அரசர், அவருக்கு அரசிக்குரிய தகுதியை வழங்கியுள்ளதாக அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.

அரசராவதற்கு மணிமுடி ஏற்கும் பெரியதொரு புனிதப்படுத்தும் சடங்குகள் சனிக்கிழமை நடக்க இருப்பதற்கு முன்னால் வியப்புக்குரிய இந்த அறிக்கை வந்துள்ளது.

66 வயதாகும் அரசர் மகா வஜ்ராலங்கோர்ன் 2016ம் ஆண்டு அவரது அன்பு தந்தை இறந்த பின்னர் அரசமைப்பு சட்ட முடியாட்சியின் மன்னரானார்.

இதற்கு முன்னால் மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ள இவருக்கு ஏழு குழந்தைகள் உள்ளன.

ஜெனரல் சுதிடா வஜ்ராலங்கோர்ன் நா அயூடியாவை அவரது அரச குடும்பத்தில் சேர்த்து சுதிடா அரசியாக மாறுவதற்கு வஜ்ராலங்கோர்ன் அரசர் முடிவு செய்துள்ளதாகவும், அரச குடும்பத்தின் பகுதியாக அரச பட்டத்தையும், தகுதியையும் அவர் கொண்டிருப்பார் என்றும் அரச அறிக்கை தெரிவிக்கிறது.

நீண்டநாள் அரசர் வஜ்ராலங்கோர்னோடு சேர்ந்து வாழ்ந்து வரும் சுதிடா அரசி, இவர்களின் உறவு முன்னதாக அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்தாலும், பல ஆண்டுகளான அவரோடு பொதுவெளியில் தோன்றியுள்ளார்.

புதன்கிழமை இரவு தாய்லாந்து தொலைக்காட்சி சேனல்களில் ஒளிப்பரப்பப்பட்ட திருமண சடங்கு காணொளிகள், அரசு குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் மற்றும் அரண்மனை ஆலோசர்கள் இதில் பங்கேற்றதை காட்டின.

சுதிடா அரசி மீது புனித நீரை அரசர் ஊற்றுவதும், இந்த தம்பதியர் திருமண பதிவேட்டில் கையெழுத்திடுவதும் ஒளிபரப்பானது.

2014ம் ஆண்டு தாய்லாந்து ஏர்வேய்ஸின் முன்னாள் விமானப் பணியாளரான சுதிடா டிட்ஜேயை, தனது மெய்காப்பாளர் பிரிவின் துணைத் தலைவராக வஜ்ராலங்கோர்ன் நியமித்தார்.

70 ஆண்டுகளான தாய்லாந்தை ஆட்சி செய்த முன்னாள் அரசர் பூமிபோன் அடூன்யடேட் உலகிலேயே அதிக ஆண்டுகள் அரசராக ஆட்சி செய்த பெருமையை பெற்று 2016ம் ஆண்டு காலமானார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *