குண்டு வெடிப்புக்கு முழு முஸ்லிம்களும் பொறுப்பல்லஅரசு தெளிவாக உள்ளது! – மன்சூர் எம்.பி. காட்டம்

“குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்றில் உள்ள பலரும் உறுதியாக உள்ளனர். இதன்போது மக்கள் குழம்பிக் கொள்ள தேவையில்லை”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் அம்பாரை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்படுகின்றமையும், அதனால் மக்கள் குழப்பத்தில் உள்ள நிலை கருதி இன்று (2) நடாத்திய ஊடகவியளாலர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது,

ஒரு சில குழுக்களின் காட்டுமிராண்டித்தனமான கொடுமையான செயற்பாடுகளால் முழு முஸ்லிம்களையும் இந்த அரசு தீவிரவாதிகளாக பார்க்கவில்லை. கடந்த உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் தீவிரவாதக் கும்பல்களை கண்டுபிடிப்பதற்காகவே இராணுவத்தினரும், பொலிஸாரும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு சோதனைகள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்தில் மன அச்சத்தினால் குர்ஆன், கிதாப்கள் மற்றும் இஸ்லாமிய புத்தகங்களை யாரும் எரிக்கவோ அழிக்கவோ தேவையில்லை.

இது எமது பதுகாப்பிற்கான சோதனையே அதன்போது நாம் ஒத்துழைப்பு வழங்குவதே முக்கியமானது. அதற்காக ஓடி ஒழிந்து பீதியில் மடியத் தேவையில்லை.
ஒரு சில இனவாதக் கும்பல்களின் அராஜாக செயற்பாட்டால் முழு முஸ்லிம்களும் அச்சத்தில் மிதக்கின்றனர். உண்மையிலே இது விடயம் கவலையளிக்கிறது. இவ்வாறான மதாவாத தீய சக்திகளின் செயற்பாடுகளுக்கு அஞ்சி ஒரு போதும் எமது மதத்தின் அடிப்படை செயற்பாடுகளை யாரும் கைவிடாதீர்!

அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமாயின் அதற்காக குரல்கொடுக்க நானும் எமது முஸ்லிம் காங்கிரஸ_ம் தயாரக உள்ளோம். வெறுமெனே சில விசவாத செயற்பாடுகளால் என்னையும் ஓரங்கட்டி அரசியல் நடாத்த ஒரு சில விஷமிகள் இச் சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தினர். அது ஒரு போதும் நடைபெறாது.

நேற்று சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர் எனது சாரதியாக இருந்தாலும் கூட பொலிஸார் அவர்களின் கடiயை தடையின்றி மேற்கொள்ள எவ்வித தலையீடுகளையும் மேற்கொள்ளாது உள்ளேன்.

இந்த சந்தர்ப்பங்களையும் அரசியல் பகடக்காய்களாக பயன்படுத்த சிலர் எத்தணிக்கின்றனர். நாம் அனைவரும் ஒரு விடயத்தை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். இது சமூகத்தின் மீதான பிரச்சினை இந் நேரத்தில் முழு நாட்டிலுமுள்ள அனைத்து முஸ்லிம்களும் அச்சத்தில் உள்ளனர். அவ்வாறு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் யார் குற்றவாளியானாலும் தண்டிக்கப்படல் வேண்டும், யார் தீவிரவாதியானலும் அழிக்கப்படல் வேண்டும்.

அந்த வகையில் தற்போது எமது பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற சுற்றிவளைப்புக்கள், தேடுதல் நடவடிக்கைகள் அனைத்தும் வரவேற்கத்தக்கது. அதற்காக மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *