ஜூலியன் அசாஞ்சிற்கு 11 மாதங்கள் சிறை!

விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சிற்கு பிணை நிபந்தனைகளை மீறியமைக்காக 50 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈக்வடோர் தூதரகத்தில் வைத்து கடந்த மாதம் கைது செய்யப்பட்ட 47 வயதான ஜூலியன் அசாஞ்ச், கைதின் பின்னர் பிணை நிபந்தனைகளை மீறியதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

தம் மீதான பாலியல் குற்றச்சாட்டை நிராகரித்து வரும் ஜூலியன் அசாஞ்ச், அதற்காக ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதைத் தடுக்க 2012 ஆம் ஆண்டில் லண்டன் தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.

நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட ஜூலியன் அசாஞ்சின் கடிதத்தில், அவர் மிகக் கடினமான சூழ்நிலைகளோடு போராடிக் கொண்டிருப்பதாகவும், யாரையாவது அகௌரவப்படுத்தியதாக நினைத்தால் தன்னை மன்னிக்குமாறும் கூறியுள்ளார்.

அச்சந்தர்ப்பத்தில் தனக்கு சரியெனப் பட்டதையும் தன்னால் செய்ய இயன்றதையும் மாத்திரமே செய்ததாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சவுத்வார்க் க்ரௌன் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த விசாரணையில், தூதரகத்தில் ஔிந்துகொண்டதன் மூலம் வழக்கு விசாரணைகளுக்கு அணுகமுடியாதவாறு அசாஞ்ச் இருந்துகொண்டதாக நீதிபதி டெபோரா டெய்லர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அச்சம் காரணமாக அவ்வாறு நடந்துகொண்டதாக அசாஞ்ச் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அசாஞ்சிற்கு எதிரான நீதிமன்றத்தின் செயற்பாடுகள் குறித்து வெட்டகமடைவதாக அவரின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *