ஈஸ்டர் குண்டுவெடிப்பில் 4 சீன விஞ்ஞானிகள் பலி – தமது நாட்டவர்களை உடன் வெளியேறுமாறு கோருகிறது சவூதி

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில், சீன விஞ்ஞானிகள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன விஞ்ஞான அகடமியைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் ஆய்வு நோக்கங்களுக்காக கடந்த ஏப்ரல் நடுப்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போதே, அவர்கள் குண்டுவெடிப்பில் பலியாகியுள்ளனர். இவர்களின் சடலங்கள் குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்தக் குண்டுவெடிப்பில் சீன விஞ்ஞான அகடமியைச் சேர்ந்த மேலும் 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக சீனாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்  என்று சீனாவின்  ஷின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, இலங்கையில் உள்ள தமது நாட்டவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு, சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள உள்ள சவூதி அரேபிய தூதரகத்தை மேற்கோள்காட்டி, அந்த நாட்டின் அரச தொலைக்காட்சியான அல் எக்பாரியா இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, சவூதி அரேபிய நாட்டவர்களை இலங்கையில்  இருந்து வெளியேறுமாறு தூதரகம் கேட்டுக் கொள்வதாக, சவூதி அரேபிய தூதரகத்தின் கீச்சக குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ற குண்டுவெடிப்புகள் மற்றும் அதையடுத்து, நடத்தப்படும் தேடுதல்கள், விசாரணைகள், பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டே சவூதி அரேபிய அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *