அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல்

தனியார்துறை ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவிலிருந்து 12 ஆயிரத்து 500 ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், நாளாந்த கொடுப்பனவும் 400 ரூபாவிலிருந்து 500 ரூபாவரை அதிகரிக்கப்படவுள்ளது.

ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பள சட்டத்தின் கீழ் – 2016ஆம்ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தும் வகையில் தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் ரூபா.10000 மற்றும் ஆகக்குறைந்த நாளாந்த சம்பளம் 400 ரூபாவாக இருக்கவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது நிலவும் வாழ்க்கை செலவுக்கு பொருத்தமான வகையில் தனியார் துறையில் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 12, 500 ரூபாவாகவும்

– ஆகக் குறைந்த நாளாந்த கொடுப்பனவு 500 ரூபாவாகவும் இருக்க வேண்டும் என தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை சிபாரிசு செய்துள்ளது.

இந்த சிபாரிசை கவனத்தில் கொண்டு தனியார்துறையில் சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 2016ஆம் ஆண்டு இல. 3யின் கீழான ஊழியர்களின ஆகக்குறைந்த சம்பள சட்டத்தில் திருத்ததை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அந்தஸ்து அற்ற தொழில் மற்றும் தொழில்சங்க அமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *