‘கூட்டுப் பொறுப்பினை ஏற்றுகின்றேன், மன்னித்துவிடுங்கள்’ – பிரதமர்

” நான் நாட்டின் பிரதமர் எனும் அடிப்படையில் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களுக்கான கூட்டுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றேன். அரசாங்கம் எனும் ரீதியில் இக்குறைபாடு தொடர்பில் நான் உண்மையாகவே எமது மக்களிடத்தில் எனது வருத்தத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.” – என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே இந்த விடயத்தில் குறிப்பிட்டார். அவரது உரை வருமாறு,
உயிர்த்த ஞாயிறன்று நாங்கள் முகங்கொடுத்த பயங்கரவாத தாக்குதலின் தாக்கம் இன்னும் குறைவடையவில்லை.
எமதுநாட்டினை இரத்த ஆறாகமாற்றவேண்டும் என்பதே இக்கொடூரதாக்குதலினை திட்டமிட்டவர்களின் நோக்கமாக அமைந்திருந்தது. எனினும் எமதுமக்கள் பிரிவுகளுக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்காது சட்டத்தினையும்  ஒழுங்கினையும் பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் முன்னின்று செயற்பட்டோம்.
எமது பேராயர்   உட்பட கிறிஸ்தவ மததலைவர்கள், மகாநாயக்கதேரர்கள் உட்பட மகாசங்கத்தினர், இஸ்லாம் மற்றும் இந்து மதத் தலைவர்கள்,சிவில் அமைப்புகள்,கிராமியதலைவர்கள் என அனைவரும் இணைந்து முழு இலங்கையிலும் சமாதானத்தினையும், நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவதற்கு அர்ப்பணித்தனர்.
முஸ்லிம் மக்கள் சமாதானத்தினை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கைகளை  மேற்கொண்டனர். காவல் துறையினர் உட்பட பாதுகாப்புதரப்பினருக்கு பொது மக்கள் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்கினர்.
முதலில் இவ்வனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது சகோதர சகோதரிகள் ,பிள்ளைகள் எனபலர் இந்ததாக்குதலில் உயிரிழந்தனர்.
வெளிநாட்டவர்கள் பலரும் உயிரிழந்தனர். இதில் சிலவெளிநாட்டவர்கள் எமது நாட்டுக்கு உதவிஒத்தாசைகளை வழங்குவதற்கு வருகைதந்தவர்கள் ஆவர். இன்னும் சிலர் எமதுநாட்டின் இயற்கை அழகைகண்டுகளிப்பதற்கு வந்தவர்கள் ஆவர்.
தற்போது பதிவாகியுள்ள உயிரிழப்புகள் தொடர்பில் கணக்கிடப்பட்டு வருகின்றது. உயிரிழந்த அனைவருக்காகவும் முழு இலங்கையர்களும் கவலைப்படுகின்றனர். அதிர்ச்சியடைகின்றனர். தற்போது 149 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் நாம் பூரணசுகமடையபிரார்த்தனை செய்கின்றோம்.
இறுதிச் சடங்குகளுக்காகவும், உயிரிழப்புகளுக்காகவும் ஆரம்பத்தில் ஒரு இலட்சம் ரூபாவினையும், பின்னர் நட்டஈடாக மேலும் ஒன்பது இலட்சம் ரூபாய்களையும் வழங்குவதற்குஅரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாம், இழந்த உயிர்களை பணத்தினால் மதிப்பிட்டு விடமுடியாது. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் ஏதேனுமொரு ஒத்துழைப்பாகவும்  உதவியாகவுமே இந்த பணத்தினை நாங்கள் வழங்குகின்றோம். பாதிப்புக்குள்ளான தேவாலயங்கள் மூன்றினையும் மீண்டும் புனர்நிர்மாணம் செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கைஎடுக்கும்.
அதே போன்று மீண்டும் வழமை போலவேதேவாலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்வது தொடர்பில் மதிப்பிற்குரியபேராயர் காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையுடன் நானும் , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் , பாதுகாப்புதரப்பு உயர் அதிகாரிகளும் கலந்துரையாடினோம்.
தேவையான அனைத்துவகையான பாதுகாப்பினையும் வழங்கி அனைத்து சமய நடவடிக்கைகளையும்  வழமைபோல மேற்கொள்வதற்கு அவசியமான பின்னணியினை நாம் ஏற்படுத்திவருகின்றோம்.
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு குறுகியகால இடைவெளியினுள் சந்தேகத்துக்கு இடமான பலரை எமது பாதுகாப்புபிரிவினர் கைதுசெய்துள்ளனர்.விசாரணையின் முன்னேற்றம் குறித்து எமக்குதற் போது திருப்தியடைந்துகொள்ளமுடியும். இந்ததாக்குதல் மிகநீண்ட காலமாக திட்டமிடப்பட்ட ஒன்று என்பதை மாத்திரமே தற்போதைக்கு வெளிப்படுத்த முடியும்.
மிகவும் நுட்பமாக திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல். இவ்வாறான செயல்களை செய்வதற்கு கட்டாயமாக வெளிநாட்டவர்களின் ஒத்துழைப்பும் அறிவும் தேவைப்படுகின்றது. இத்தாக்குதல்களுடன் தொடர்பான ஒரு சிலர் வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சிகளை பெற்றுள்ளனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறான பின்னணியில் நாங்கள் இதனை முறியடிப்பதற்கு வெளிநாட்டவர்களின் ஒத்துழைப்பினையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளவேண்டியுள்ளது.
இந்த குழு தமது தாக்குதல்களை மாவனல்லை சிலையினைசேதமாக்கிய சம்பவத்துடன் ஆரம்பித்துள்ளனர். அடுத்ததாக அவர்களின் உளவுத் தகவல்களை வழங்கினார் என்பதால் எமது அமைச்சர் ஒருவரின் செயலாளரரினை சுட்டனர். அந்தசெயலாளர் ஓர் முஸ்லிம் இனத்தவர்.
இன்று  அவர்கள்  கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டுதாக்குதல் நடத்தியுள்ளனர்.
இப்பயங்கரவாத தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் மிகவும் சிறுகுழுவினரே. அவர்களில் அதிகமானோரும், அதிகதொகையான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்னும் சிறுதொகையினரையே சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியுள்ளது. அதனால் ஆபத்து இன்னும் முழுமையாக குறையவில்லை. அதனால் நாங்கள் மிகவும் பொறுப்புடன்பொறுமையாக செயற்படுவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு காவல் துறையினருக்கும் பாதுகாப்புதரப்பினருக்கும் நாம் நமது பங்களிப்பினைவ ழங்கவேண்டும்.  தற்போது நான் மற்றுமொரு முக்கியமான விடயம் குறித்து உங்களது கவனத்தினை ஈர்க்க விரும்புகின்றேன்.
இத்தாக்குதல்களுடன் தொடர்பான உள்நாட்டு அமைப்புக்கள், நபர்கள் தொடர்பில் புலனாய்வுப்பிரிவினருக்குபல தடவைகள் தகவல்கள் கிடைத்தன. உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பிலும் வெளிநாட்டு புலனாய்வுபிரிவினர் தகவல்களைவழங்கி இருந்தனர்.
அந்த சில முக்கியமான தகவல்கள் எனக்குகிடைக்கவில்லை என்பது உண்மையே.  எனினும் அதன் மூலம் நான் பொறுப்பைவிட்டும்  ஒதுங்கிக் கொள்ளமாட்டேன்.
நான் நாட்டின் பிரதமர் எனும் அடிப்படையில் இதற்கான கூட்டுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றேன். அரசாங்கம்எனும் ரீதியில் இக்குறைபாடு தொடர்பில் நான் உண்மையாகவே எமது மக்களிடத்தில் எனதுவருத்தத்தினைதெரிவித்துக் கொள்கின்றேன்.
எனினும் வருத்தத்தினைவெளிப்படுத்துவதுடன்மாத்திரம் நின்றுவிடமுடியாது. நாங்கள் இவ்வாறான குறைபாடுகள் எதிர்காலத்தில் ஏற்படா திருப்பதற்கான நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்ளவேண்டும். பொதுமக்களின் உயிரினைபாதுகாப்பதற்குஅர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.
நான் அதற்கான பொறுப்பினை ஏற்கின்றேன். அர்ப்பணிக்கின்றேன்.
இந்தபயங்கரவாததாக்குதலுடன் சர்வதேசமும் தொடர்புபடுகின்றது. அதுசாதாரணமானபயங்கரவாதமொன்றல்ல.
உலகின் பலநாடுகளில் காணப்படுகின்றபயங்கரவாதகருத்துக்களைகொண்;ட ஐளுஐளு பயங்கரவாதஅமைப்புடன் இந்ததாக்குதல்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக எமக் குதகவல்கள் கிடைத்துள்ளன.
இது வரை இச்சர்வதேசபயங்கரவாதமானது இந்தியா,பங்களாதேஷ;,பாகிஸ்தான்,மாலைதீவுபோன்றஅண்டையநாடுகளிலும் பல்வேறுமட்டத்திலானதாக்குதல் சம்பவங்களைமேற்கொண்டுள்ளது.
அதனால் அந்தசர்வதேசபயங்கரவாதத்தினை தேசிய மட்டத்தில் மாத்திரம் முறியடித்துவிடமுடியாது. குண்டுகள் இலங்கையில் வெடித்தாலும்,அதன் தொலைஇயக்கி வேறுநாடுகளில் இருக்கலாம். திட்டங்கள் வேறுநாடுகளில் வகுக்கப்பட்டிருக்கலாம்.
பயிற்சிகள் கூட வேறுநாடுகளில் வழங்கப்பட்டிருக்கலாம். வேறு நாடுகளில் பயங்கரவாதிகளின் மூளைகள் சலவைசெய்யப்பட்டிருக்கலாம். அதனால் அவ்வனைத்து தரப்பினரையும் அழிக்காமல் சர்வதேசபயங்கரவாதத்தினை அடியோடுஅழித்துவிட முடியாது.
அதனால், போலிபிரச்சாரங்களுக்கும், வாய்ப்பேச்சுகளுக்கும் குழம்பிவிடாது பொறுமையாக நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்தசந்தர்ப்பத்தில் மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது.
இவ்வாறான சம்பவங்களுக்குமுகங்கொடுத்த நாடுகள் தமது உள்ளக சட்டக் கட்டமைப்பில் மாற்றங்களைகொண்டுவந்தன.
சர்வதேசபயங்கரவாதத்திற்கு முகங்கொடுப்பதற்கு அவசியமான சட்டங்களை அறிமுகம் செய்தன. எனினும் அவ்வாறான சம்பவங்கள் பதிவாகாதநாடுகள் அதுதொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
பயங்கரவாதத்திற்கு உதவுபவர்கள் தொடர்பில் எமது நாட்டில் மிகவும் குறுகியவட்டத்திலான சட்டமேகாணப்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் மிகவும் கடுமையாக நடந்துகொள்ளும் அளவிற்கு அவ்வாறானசட்டங்கள் பலமாக இல்லை.
நாம் அந்தசொற்பொருட்களை சர்வதேசபயங்கரவாதத்துக்கு முகங்கொடுப்பதற்கு ஏற்றாற் போல் மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும். உதவுபவர்களை கைதுசெய்வதற்கு ஏற்றாற் போல் மாத்திரமல்லாமல் அவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் அரசுடைமையமாக்குவது தொடர்பாகவும் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டியுள்ளது.
அதேபோன்று தீவிரவாதமதக் கல்விதொடர்பிலும் நாம் அதிககவனம் செலுத்தவேண்டியுள்ளது. அவ்வாறான கல்விநிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கும்கடுமையான சட்டங்கள் இயற்றப்படவேண்டும்.
சர்வதேசபயங்கரவாதத்துக்கு முகங்கொடுப்பதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தான உறுப்புரைகளை நாம் பயங்கரவாததடுப்பு சட்ட மூலத்தில் இணைத்திருந்தோம். மேலும் பல உறுப்புரைகளை திருத்தம் மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் முன்வைப்பதற்கும் எதிர்பார்த்திருந்தோம். எனினும் இப்புதிய சட்டமானது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
அதுமாத்திரமல்லாமல் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் நேரடியாக சம்பந்தப்படாத,எனினும் அவ்வாறான கருத்துக்கள் கொண்டவர்களுக்குப்புனர்வாழ்வு அளிக்கும்வேலைத் திட்டமொன்றை தயாரிக்கவேண்டும்.
எவ்விதஆயதங்களையும் பயன்படுத்தாமல் வாகனங்களைமாத்திரம் பயன்படுத்திபயங்கரவாதநடவடிக்கைகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களைநாம் இங்கிலாந்தில்அறியமுடிகிறது.
அதனாலேயேஅவ்வாறானஅனுபவங்கள் கொண்டநாடுகளின் ஒத்துழைப்புகளும் எமக்குதேவைப்படுகின்றன. இதுமிகவும் கடினமானசவாலாகும்.
எனினும் சமாதானத்தினைவிரும்புகின்றஎமதுநாட்டுமக்களினதும்,உலகின் அனைத்துநாடுகளினதும்பூரணஒத்துழைப்பினைபெற்று இப்பயங்கரவாதத்தினை முழுமையாகஅழிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம் எனநான் உங்களுக்குஉறுதியளிக்கின்றேன்.  தற்போதும் உலகின் பலநாடுகளின் தலைவர்கள் எமக்குஒத்துழைப்புவழங்குவதற்குதயார் என அறிவித்துள்ளனர்.
இவ்வாரம் முழுவதும் நாட்டின் பாதுகாப்புதொடர்பிலேயேஎமதுகவனம் செலுத்தப்பட்டது. பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும், பயங்கரவாத செயல்களுடன் தொடர்புபட்ட நபர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்குமான அடித்தளத்தினை இடுவதற்குமே அரசாங்கம் தமது முழு பலத்தினையும் பிரயோகித்தது.
அடுத்தவாரத்திலிருந்துநாட்டின் பொருளாதாரத்தினைமீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிஉள்ளது.
இந்தபயங்கரவாத தாக்குதலானது எமதுநாட்டின் பொருளாதாரத்திற்கு பாரியதொரு தாக்கமாகும். லொத்தர் வியாபாரிமுதல் பாரியளவிலானவியாபாரிவரைஅனைவரும் பாரியளவிலானபின்னடைவினைஎதிர்நோக்கியுள்ளனர்.
சுற்றலாத்துறைவீழ்ச்சியைசந்தித்தது.தற்போதுஅண்ணளவாகநாட்டுக்குஆயிரம் டொலர் மில்லியன்கள் வரைநட்டம் ஏற்பட்டுள்ளது. சிலபோதுஅதுமேலும் அதிகரிக்கலாம். அதுகடுமையானநிலைமையாகும். ஆகவே,பொருளாதாரத்தினைமீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையிலும் நாம் வெற்றிபெறவேண்டும்.
இன்றுகைச்சாத்திடப்பட்டஐக்கியஅமெரிக்ககுடியரசின் மிலேனியம் சேலஞ்ச்கோபரேஷன் அபிவிருத்திஒப்பந்தத்தின் மூலம் இந்தபொருளாதாரப் போராட்டத்தினைவெற்றிக் கொள்வதற்குஉதவிகள்கிடைக்கின்றன. அதன் மூலம் அபிவிருத்திவேலைத்திட்டங்களுக்காக 500 மில்லியன் அமெரிக்கடொலர்கள் நன்கொடையாககிடைக்கஉள்ளது.
நாம் வௌ;வேறுமொழிகளைபேசுபவர்களாக இருக்கமுடியும். வௌ;வேறுமதங்களைபின்பற்றுபவர்களாக இருக்கமுடியும். வேறு இனங்களைபிரதிநிதித்துவப்படுத்தமுடியும்.
எனினும் நாம் அனைவரும் இலங்கைதாயின் பிள்ளைகளே. ஆகவே,ஒருதாய் பிள்ளைகளாக இச்சந்தர்ப்பத்தில் ஒன்றாக இணைந்துசெயற்படுவதற்கு உறுதிபூணுவோம். அன்பு, பரிவிரக்கம், கருணை,மனஅமைதிஎனும்புத்தரின்குணப்பண்புகளைமக்கள் மத்தியில் பரப்புவோம்.
அப்போதுதான் இந்தகடினமானசந்தர்ப்பத்தில் நாட்டினைகட்டியெழுப்பிமுன்னோக்கிச் செல்லமுடியும். மற்றுமொருகடினமானசந்தர்ப்பத்தினைமுகங்கொடுத்துக் கொண்டிருக்கும் நாங்களும்,எமதுநாடும்,எமதுபிள்ளைகளதுஎதிர்காலத்தினைபாதுகாப்பதற்குபொறுமையாகவும்,ஒத்துழைப்புடனும் செயற்படுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *