39 நாடுகளுக்கான விசா சலுகை இரத்து!

மே முதலாம் திகதி முதல் 39 நாடுகளுக்கு on arrival visa முறையை அமுல்படுத்த, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு எடுத்திருந்தி முடிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 39 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு இலகுவாக வரும் விதமாக, இந்த on arrival visa முறை அமுல்படுத்தப்படவிருந்தது.

ஆஸ்திரியா, பல்கேரியா, பெல்ஜியம், கம்போடியா, குரோசியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸிடொனியா,பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், கிறிஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லித்வியா, லித்துவேனியா,

லக்ஸம்பேர்க், மோல்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துகல், ரோமானியா, சிலோவேனியா, சுவீடன், ஸ்பானியா, ஐக்கிய அரபு இராச்சியம், அவுஸ்ரேலியா, தென் கொரியா, கனடா, சிங்கப்பூர், நியூஸிலாந்து, மலேசியா, தாய்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள், இம்முறை ஊடாக எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் இலகுவாக இலங்கைக்கான சுற்றுலா விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்தே மேற்படி முடிவு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

எனினும், வழமையான முறைமையின்கீழ் விசாவை பெற்றுக்கொண்டு வரமுடியும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *