‘பொல்லாட், நரேன் ‘அவுட்’ – மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு!

உலக கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

10 அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ஆம் திகதி  தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான உத்தேச அணிகளின் பட்டியலை ஏப்ரல் 23 ஆம் திகதிக்குள்  சமர்ப்பிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்து இருந்தது. இதன்படி நேற்று முன்தினம் கடைசி அணியாக வீரர்களின் பட்டியலை ஐ.சி.சி.யிடம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சமர்ப்பித்தது.

ஜாசன் ஹோல்டர் (Jason Holder ) தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியில் எதிர்பார்க்கப்பட்டது போலவே சில முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

குறிப்பாக பிராவோ, சமி, பொலார்ட் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் ஐ.பி.எல் தொடரில் கலக்கி வரும் கிறிஸ் கெயில் மற்றும் ரசல் ஆகியோருக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இளம் வீரர்களைக் கொண்ட இந்த அணியில்,

ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), பாபியன் ஆலென், டேரன் பிராவோ, கார்லஸ் பிராத்வெய்ட், ஷெல்டன் காட்ரெல், ஷனோன் கேப்ரியல், கிறிஸ் கெய்ல், ஹெட்மயர், ஷாய் ஹோப், இவின் லீவிஸ், ஆஷ்லே நர்ஸ், நிகோலஸ் பூரன், கெமார் ரோச், ஆந்த்ரே ரஸ்செல், ஒஷானே தாமஸ் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *