‘குழப்பமடையவேண்டாம்’ – விசேட அறிவிப்பு

பாதுகாப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகள் தொடர்பில்  பொதுமக்கள் குழப்படைய தேவையில்லை என அரச தகவல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான பாதுகாப்பு சுற்றிவளைப்புகள் தொடர்பாக அறிக்கையிடும்போது பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மற்றும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரம் ஏற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்டு – அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவெவவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

”  பயங்கரவாதத்துக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட தகவல்களை அறிக்கை இடும் பொழுது பொலிஸ் ஊடக பேச்சாளர் முப்படைகளின் ஊடக பேச்சாளர்கள் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் உறுதி செய்யப்பட்ட உத்தியோகப்பூர்வ செய்தியை மாத்திரம் ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த பயங்கரவாத செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதற்காக அரசாங்கம் இதுவரையில் முப்படை உள்ளிட்ட பொலிஸாருக்கு தேவையான அதிகாரத்தை வழங்கியுள்ளதுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தல் விசாரணை மற்றும் நடவடிக்கை பணிகள் இராணுவத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

. இது தொடர்பான தகவல்களை அறிக்கையிடும் பொழுது பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அல்லது அரசாங்க தகவல் திணைக்களத்தினால் உறுதி செய்யப்பட்ட உத்தியோகப்பூர்வ செய்தியை மாத்திரம் ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பாதுகாப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை மற்றும் விசாரணை பணிகள் தொடர்பில் அவசர தொடர்பாடல்கள் ஊடாக பல்வேறு அறிக்கை வெளியிடுவதனால் பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் குழப்பத்துக்கு உள்ளாவதுடன் இந்த நடவடிக்கை விசாரணைப்பணிகளுக்கு தடையாக அமைவதாக பாதுகாப்பு பிரிவு அடையாளம் கண்டுள்ளது.

இதேபோன்று இந்த தேடுதல் நடவடிக்கைகளுக்கான சில நபர்களினால் மேற்கொள்ளப்படும் குறிஞ்செய்தி வதந்தி மற்றும் ஏனைய அவசர தொடர்பாடல்கள் காரணமாக பொதுமக்கள் பெரும் குழப்பத்துக்கு உள்ளாவதுடன் அவர்களது நாளாந்த நடவடிக்கைகளுக்கு தடைகள் ஏற்படுவதாகவும்

விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவிப்பது மிகவும் முக்கியமான தகவல்களை பொலிஸ் ஊடக பேச்சாளரினால், முப்படைகளின் ஊடக பேச்சாளர்கள் அல்லது அரசாங்க தகவல் திணைக்களத்தினால் உறுதிசெய்யப்பட்ட உத்தியோகப்பூர்வ செய்தியின் மூலம் அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக அவசர தொடர்பாடல் மூலமாக கிடைக்கப்பெறும் தகவல்களினால் குழப்பம் அடைய வேண்டாம் என அனைத்து இலங்கை மக்களையும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *