21 கைக்குண்டுகள், 6 வாள்களுடன் மோதரையில் மூவர் சிக்கினர்!

கொழும்பு, மோதரைப் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 21 கைக்குண்டுகளும், 6 வாள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போதே இவை சிக்கின.

குறித்த கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *