வைரலாகும் கொரில்லா ‘செல்பி’!

மனிதர்கள் மட்டும் அல்ல கொரில்லாக்களும் செல்பி புகைப்படங்களுக்கு பழகிவிட்டன.

இரண்டு கொரிலாக்கள் செல்பி புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

இந்த இரண்டு கொரில்லாக்களும் சிறு வயதில் வேட்டைக்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டவை.

மேலுள்ள இந்த கொரில்லாக்களின் புகைப்படமானது, காங்கோவில் உள்ள விருங்கா தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டது.

இந்த கொரில்லாக்களின் பெற்றோர்கள் வேட்டையாடிகளால் கொல்லப்பட்டப் பின், இவை இந்த தேசிய பூங்காவில் வளர்க்கப்பட்டன

இந்த கொரிலாக்கள் அதன் பாதுகாவலர்கள் போல பாவனை செய்ய தொடங்கிவிட்டன என இந்த பூங்காவின் துணை இயக்குநர் பிபிசியிடம் கூறினார்.

இந்த ரேஞ்சர்தான் தமது பெற்றோர் என இந்த கொரிலாக்கள் நம்ப தொடங்கிவிட்டன என்கிறார் அவர்.

இந்த இரு கொரிலாக்களின் தாய்களும் 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொல்லப்பட்டன. அந்த சமயத்தில் இந்த கொரிலாக்களின் வயது 2 மற்றும் 4 என்கிறார் பூங்காவின் துணை இயக்குநர் இன்னசெண்ட்.

மேலும் அவர், “இது இயல்பான நிகழ்வு கிடையாது. எனக்கு இதை பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எப்படி ஒரு கொரில்லா மனிதன் போல நிற்க முடியும் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்,” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *