வெடிகுண்டுகள் தாங்கிய வாகனங்கள் கொழும்பில்! – பொலிஸார் எச்சரிக்கை

வெடிகுண்டுகளுடன் வான் ஒன்றும் லொறியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ்மா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றைவிட 5 மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனம் ஒன்று தொடர்பிலும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் குறித்த இந்த வாகனங்கள் தொடர்பிலான விடங்கள் ஏதேனும் அறிய முடிந்தால் உடனடியாகப் அவசர பொலிஸ் இலக்கத்துக்கு அழைத்துத் தெரியப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகனங்களின் விபரம் வருமாறு:-

#. WP BCY- 2183
(Black Red TVS Scooty)

#. NWP VP 7783
(Midnight Black Bajaj pulsar 150)

#. SG PH 3779
(Black Nissan Carvan Van)

#. VC 4843 (MC-Black Yamaha)

#. DAE 4197 (JAC single cab, Aluminium white Mahendra)

#. US 3740 (Honda black scooty)

#. BDM 0596 (Black scooty Honda)

# 144-2646 (Mc red)

இதேவேளை, ‘உலகத்துக்கு ஒரே கடவுள்’ என்று எழுதப்பட்ட மோட்டார் சைக்கிளொன்றும் கொழும்பின் பல பகுதிகளிலும் பயணித்து வருகின்றது எனவும், அதில், தான் தன்னையே கொலைசெய்துகொள்ளப் போவதாக எழுதப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோட்டார் சைக்கிள் தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *