கொச்சிக்கடை குண்டு வெடிப்பின் கொடுமையை உணர்த்தும் படம்!

 

இலங்கையில் 8 இடங்களில் நேற்று இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இயேசுவின் சிலை மீது இரத்தம் படிந்திருக்கும் புகைப்படம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு நடந்தபோது அதில் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்துபோனவர்களின் இரத்தம் அங்கிருந்த இயேசு நாதரின் சிலுவையில் தெறித்துள்ளது.

குறித்த புகைப்படத்துடன் குண்டு வெடிப்பின் கொடுமையை உணர்த்தும் வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *