இந்தியத் தூதரகம்மீதும் தாக்குதல் திட்டம்! சூத்திரதாரிகள் யார்? ஹரினின் டுவிட்டால் பரபரப்பு!!

நாட்டில் பல கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்திய உயர் ஆணையம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் காணப்படுகின்றது என பாதுகாப்பு அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

தேசிய தவுத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் தாயிம் மொஹமட் சஹரானின் தலைமையில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு பிரிவினரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையிலுள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்திய உயர் ஆணையம் ஆகியன இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவல்களின் பிரகாரம், தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்ட சிலர் குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களின் முழுமையான தகவல்களும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு, பாதுகாப்பு பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை திட்டமிட்ட சந்தேக நபர், சமூக வலைதளங்களின் ஊடாக இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாகவும்

புலனாய்வு பிரிவின் தகவல்களை மேற்கோள்காட்டி, பாதுகாப்பு அமைச்சகத்தினால் அந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *