மஹிந்த, சம்பந்தனுக்கு ரணில் விளக்கம்!

கொழும்பிலும், நீர்கொழும்பில், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளின் விசாரணை பற்றிய விடயங்களை எதிரணித் தலைவர்களுக்கு நேற்றிரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கினார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு பிரதமர் ரணிலும், பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவும் விளக்கமளித்தனர்.

இதன்போது தேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனப் பிரதமரை வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த, இக்கட்டான இந்தத் தருணத்தில் அரசியல் பேதங்களை மறந்து அரசுக்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் எதிர்க்கட்சி வழங்கும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, கோழைத்தனமான இந்தத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கைதுசெய்யப்பட வேண்டும் எனவும், அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் இதன்போது பிரதமரிடம் இரா.சம்பந்தன் எம்.பி. வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *