பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு! 24 பேர் கைது!! – நாடு திரும்பினார் ஜனாதிபதி

இலங்கையில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குண்டு வெடிப்புச் சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது. 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அதேவேளை, தனிப்பட்ட பயணமாக சிங்கபூர் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை நாடு திரும்பினார். பிரதமர், பாதுகாப்பு படைகளின் தளபதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

அவசர தகவல்களை அறிந்துகொள்வதற்காக, 24 மணிநேர சேவையை 011 302 4873, 011 302 4883 மற்றும் 011 201 3039 ஆகிய இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ​வெளிநாட்டவர்கள் 0112 32 3015 என்ற இலக்கத்தில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *