அமைச்சரவையும் அவசரமாகக் கூடுகிறது! வெளிநாட்டு தூதரகங்களும் கழுகுப்பார்வை!!

நாட்டில் 6 இடங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்று, நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், இதன் பின்புலம் குறித்து ஆராய்வதற்காக அமைச்சரவைக் கூட்டமும் இன்று நடைபெறவுள்ளது.

அத்துடன், பாதுகாப்பு சபைக் கூட்டமும் கூடவுள்ளது.  இலங்கையில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் குறித்து கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களும் விசேட கவனம் செலுத்தியுள்ளன.

ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்

  •  நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
  • வெடிப்புச் சம்பவத்தின் பின்புலம் குறித்து விசாரணை 
    நடத்துமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை
    விடுத்துள்ளேன்.
  • விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
  • வெடிப்புச் சம்பவங்கள் வேதனையளிக்கின்றன.
  • வதந்திகளை நம்ப வேண்டாம். விழிப்பாக செயற்படுங்கள்.

இரத்ததானம் செய்யுங்கள்

*சட்டம், ஒழுங்கை எவரும் கையிலெடுக்ககூடாது. பாதுகாப்பு தரப்பினருக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குங்கள்.

* பொதுமக்கள் பதற்றமடையாமல் விழிப்பாக இருக்கவேண்டும்.

* முடியுமானவர்கள் இரத்ததானம் செய்யுங்கள்.

*விடுமுறையில் இருந்தாலும் இன்று சேவைக்கு திரும்புமாறு வைத்தியர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *