நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்! – உள்நாட்டு விமான சேவைகள், ரயில் சேவைகளும் இடைநிறுத்தம்

இலங்கை முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நாளை காலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் அடுத்தடுத்து இடம்பெற்றுவரும் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து பாதுகாப்பைக் கருத்தில்கொண்டே நாடு முழுவதும் இரவு நேர ஊடரங்குச் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

“பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை உடன் அமுல்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்தார். இதன்படி, தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கையின் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளும், ரயில் சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *