இலங்கையில் பெரும் துயரம்! தேவாலயங்களில் பாரிய குண்டு வெடிப்புகள்! பலர் பலி!! பலர் படுகாயம்!!!

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவபிட்டி ​புனித செபஸ்ரியன் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியவற்றில் இன்று காலை பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து நாட்டில் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.

இந்தச் சம்பவங்களில் குழந்தைகள் உட்படப் பலர் பலியாகியுள்ளனர். அத்துடன், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.

மேலும், சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

உலக வாழ் கிறிஸ்தவர்கள் இன்று இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாடுகின்றனர். அந்தவகையில், குறித்த தேவாலயங்களில் பெருந்திரளான மக்கள் இன்று காலை வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *